scorecardresearch

சூரிய நமஸ்காரம் செய்த சிறுத்தை; இந்த வீடியோவை பாருங்க எப்படி தெரியுது?

காட்டில் ஒரு சிறுத்தை சூரிய நமஸ்காரம் செய்வது போல உடலை வலைத்து சோம்பல் முறிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Surya Namaskar by Leopard, Leopard stretching like Surya Namaskar, சூரிய நமஸ்காரம் செய்த சிறுத்தை, வைரல் வீடியோ, Leopard stretching like Surya Namaskar, Leopard Surya Namaskar video goes viral
சூரிய நமஸ்காரம் செய்வது போல உடலை சோம்பல் முறிக்கும் சிறுத்தை

காடு பல அதிசயங்களை தனக்குள்ள மறைத்து வைத்திருக்கிறது. இயற்கையோடு வாழ்பவர்களால் மட்டுமே காட்டின் அதிசயங்களையும் காட்டையும் புரிந்துகொள்ள முடியும்.

காடுகள் என்றாலே வனவிலங்குகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. இப்போதெல்லாம், அடிக்கடி மனிதர்கள் – வனவிலங்குகள் இடையேயான மோதல் செய்திகள் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது. வனவிலங்குகள் அட்டகாசம் செய்வதாகக் கூறுகிறார்கள். உண்மையில், வனவிலங்குகளின் இடமான காட்டை ஆக்கிரமித்து மனிதர்களே அட்டகாசம் செய்கிறார்கள் என்று கூற வேண்டும். வனவிலங்குகளுக்கு காட்டில் வசிக்கும் பழங்குடிகளால் பாதிப்பு ஏற்படுவதில்லை, சமவெளிகளில் இருந்து காடு பார்க்கச் செல்பவர்களால்தான் பெரும்பாலும் நடக்கிறது என்று கூறப்படுகிறது.

ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் காட்டில் அரிதாகப் பதிவு செய்யப்பட்ட வனவிலங்குகளைப் பற்றிய வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் வனவிலங்குகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, வனவிலங்குகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், காட்டில் ஒரு சிறுத்தை சூரிய நமஸ்காரம் செய்வது போல உடலை வலைத்து சோம்பல் முறிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காட்டில் தனியாக இருக்கும் சிறுத்தை, யோகா பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்வது போல, உடலை வலைத்து நிமிர்த்தி சோம்பல் முறிக்கும் காட்சி, சிறுத்தை சூரிய நமஸ்காரம் செய்கிறதோ என்று நினைக்க வைக்கிறது.

ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, சிறுத்தை சூரிய நமஸ்காரம் செய்கிறது என்று வேடிக்கையாக தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார். உண்மையில் இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சாகேத் படோலா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ரஷ்ய தேசிய பூங்கா இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்க்கும்போது, யோகா பயிற்சியில் சூரிய நமஸ்காரம் பயிற்சி செய்வதைப் போலவே இந்த சிறுத்தையும் செய்கிறது. அதனால், ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா அப்படி குறிப்பிட்டதில் தவறில்லை. இந்த வீடியோவை நீங்களே பாருங்கள் எப்படி தெரிகிறது? சிறுத்தை சூரிய நமஸ்காரம் செய்கிறதா இல்லையா?

சிறுத்தை சூரிய நமஸ்காரம் செய்வது போல சோம்பல் முறிக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Leopard stretching like surya namaskar video goes viral