இந்த உலகில் நம்மை தற்காத்து கொள்ள எத்தனை வழிகள் இருக்கிறதோ அவரவர்கள் பலத்துக்கு ஏற்ப அத்தனை வழிகளிலும் போராடுகிறோம். ஆரம்பமோ, இறுதியோ போராட்டம் இல்லையெனில் காணாமல் போக வேண்டியது தான்.
இது மனிதர்களுக்கும் சரி, மிருகங்களுக்கும் சரி.
அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை மையப்படுத்திய வீடியோ ஒன்று, இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் ஷேர் செய்ததால் வைரலாகி இருக்கிறது.
#Leopard V/S Monitor #Lizard. This lizard is a fighter but #Leopards are excellent hunters. As Jim Corbett somebody said ‘King in the making’. Via Whatsapp. pic.twitter.com/hhway2dxyL
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 5, 2020
வனப்பகுதியில் சிறுத்தை ஒன்றுக்கும், Monitor Lizard என்று அழைக்கப்படும் பெரிய இன பல்லி ஒன்றுக்கும் மோதல் நடந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார்.
பல்லியை உணவாக்க சிறுத்தை முயற்சிக்க, தன்னால் இயன்ற அளவுக்கு பல்லி போராடியது. ஆனால், இறுதியில் வேட்டைக்காரன் ஜெயிக்க, இந்த உலகின் உணவுச் சங்கிலி அதன் வேலையை சப்தமின்றி செய்தது.