New Update
Advertisment
வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மருத்துவர்கள் உள் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.
வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று உலா வந்ததால் அப்பகுதியில் இரவு பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் உள் நோயாளிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வால்பாறை பகுதியில் உள்ள மருத்துவமனை சுற்றிலும் சுமார் 9 கோடி ரூபாய் செலவில் கட்டிடம் மற்றும் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு வருகிறது.
இருப்பினும் நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று வளாகத்திற்குள் நுழைந்து ஓடிய சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்பு வாசிகள் நோயாளிகள் மருத்துவர்கள் அவ்வழியே மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் இது போன்ற சிறுத்தைகள் அடிக்கடி வளாகத்திற்குள் வருவதால் பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சத்தின் பணி செய்து வருகிறார்கள் எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.