கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்கும் ராகுல் டிராவிட் – டிரெண்டிங் ஆகும் டுவீட்கள்

Rahul dravid on Corona virus memes : கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ராகுல் டிராவிட்டுடன் தொடர்புபடுத்தி செய்யப்பட்டுள்ள டுவீட்கள், சமூகவலைதளங்களங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன.

By: Published: March 18, 2020, 8:43:06 AM

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ராகுல் டிராவிட்டுடன் தொடர்புபடுத்தி செய்யப்பட்டுள்ள டுவீட்கள், சமூகவலைதளங்களங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் உள்ளிட்டவைகள் சமூகவலைதளங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள், டுவிட்டர் மூலம் அதிகளவில் செய்யப்பட்டு வருகின்றன. நெட்டிசன்கள், கொரோனா குறித்த விழிப்புணர்வை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிட்டு விழிப்புணர்வு பதிவுகளை வைரலாக்கி வருகின்றனர்.

@sagarcasm என்ற டுவிட்டர்வாசி,ராகுல் டிராவிட்டின் தனித்தன்மைகளான அமைதி உள்ளிட்டவைகளை தொடர்புபடுத்தி, மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்தல், இக்கட்டான தருணங்களில் பதட்டம் அடையாமல் நின்று நிதானித்து செயல்படுவதன் மூலம் எத்தகைய இக்கட்டான தருணங்களையும் எளிதாக வெல்லலாம் என்பதற்கேற்ற டுவிட்களை அவர் வரிசையாக வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்த டுவீட்கள் வெளியான சில மணிநேரங்களிலேயே டுவிட்டர்வாசிகளிடையே ஏகோபித்த வரவேற்பினை பெற்றன. 13 ஆயிரம் லைக்குகள் மேல் இவரது டுவிட்கள் வாங்கியுள்ளன. எளிதில் புரிந்துகொள்ளுமாறு இவரது டுவீட்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பலியாகியுள்ள நிலையில், இந்தியாவில் இதன் தாக்கம் தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் பாதுகாப்பு கருதி மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Lessons from rahul dravid covid 19 coronavirus india coronavirus memes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X