New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/09/kerala-tourism.jpg)
kerala tourism, கேரளா
kerala tourism, கேரளா
ஆகஸ்டு மாதம் புரட்டி போட்ட வெள்ளத்திற்குப் பிறகு கேரளா மாநிலம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வருகிறது.
இந்தியாவில் இயற்கை எழில் கொஞ்சும் பல சுற்றுலா தளங்கள் உண்டு. அவற்றில் தென் இந்தியாவில் அனைவரின் மனதையும் கவர்ந்தது கேரள மாநிலம் தான். எங்கு காணினும் பச்சை பசுமையும் தோன்றும் மலை மற்றும் காடுகள் வெளிநாட்டினர்களையும் கவர்ந்ததே.
அத்தகைய மாநிலத்தைப் பெருமழை பெய்து வெள்ளம் புரட்டிப் போட்டது. லட்சக் கணக்கானோர் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்தனர். ஆயிரக்கணக்கானோர் இயற்கை சீற்றத்தில் பலியானார்கள். அதில் மாநில அரசுக்கு மிகப் பெரிய வருமானமாக இருக்கும் சுற்றுலா தளங்கள் பலத்த சீற்றத்திற்கு இறையாகியது.
உலகம் முழுவதும் வந்து செல்லும், சுற்றுலாப் பயணிகள் வெள்ள பாதிப்புக்கு பயந்து கேரளத்திற்கு வருவதை நிறுத்தினர். ஆனால் இன்றோ, அதே மாநிலம் எல்லாச் சீற்றத்தையும் கடந்து மீண்டு வந்துள்ளது. பெரும்பாலான சுற்றுலா தளம் சீர் செய்யப்பட்டு மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
கேரள மாநிலத்திற்குச் சுற்றுலா பயணிகள் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அம்மாநில சுற்றுலாத்துறை ஒரு வீடியோவை தயாரித்துள்ளது.
இணையத்தளத்தில் வைரலாக பரவும் இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் கண் கலங்க வைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.