அண்மையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டது போல, குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதியை உறுதிப்படுத்தத் தவறியதற்காக" ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா தன்னைத்தானே பெல்ட்டால் அடித்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா சூரத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், குஜராத்தில் நடந்த பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதியை உறுதிப்படுத்தத் தவறியதற்காக" தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத்தின் சூரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா திங்கள்கிழமை, பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நடந்த பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதியை உறுதிப்படுத்தத் தவறியதற்காக" தவம் செய்து மக்களை தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காக தன்னைத்தானே பெல்ட்டில் அடித்துக் கொண்டார்.
பொதுக்கூட்ட மேடையில் பேசும்போது மன்னிப்புக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய இணைச் செயலாளர் கோபால் இத்தாலியா, பா.ஜ.க தலைவரை அவதூறாகப் பேச முயன்றதாகக் கூறி, குஜராத் அம்ரேலியில் ஒரு படிதார் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி, தனது பாண்ட் பெல்ட்டை எடுது தன்னைத்தானே பெல்ட்டால் அடித்துக் கொண்டார்.
ગુજરાતનો સૂતેલો આત્મા જાગવો જોઈએ.
— Gopal Italia (@Gopal_Italia) January 6, 2025
ગુજરાતમાં એક નિર્દોષ દીકરીનું સરઘસ કાઢવામાં આવ્યું અને પટ્ટાથી માર મારવામાં આવ્યો એ ઘટનામાં હું એસપીને મળ્યો પણ ન્યાય ન અપાવી શક્યો એ બદલ હું મને પોતાને સજા કરું છું.
આ સિવાય ભૂતકાળમાં અનેક ઘટનાઓ જેવી કે, લઠ્ઠાકાંડ, પેપરલીકકાંડ, મોરબીકાંડ,… pic.twitter.com/zM7qPUQZBz
மேடையில் அமர்ந்திருந்த சக கட்சித் தலைவர்களால் தடுக்கப்படுவதற்கு முன்பு கோபால் இத்தாலியா தனது பெல்ட்டை வெளியே இழுத்து தன்னைத்தானே 6 முறை அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கோபால் இத்தாலியா பாதிக்கப்பட்டவர்களுக்காக சட்ட சமூக மற்றும் அரசியல் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் ஆனால், பா.ஜ.க ஆட்சியின் கீழ் அதிகாரிகள் மற்றும் தலைவர்களின் ஊழல் தொடர்பு மக்களுக்கு நீதி கிடைப்பதை கடினமாக்கியுள்ளது என்றார்.
“மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்தது, வதோதரா படகு கவிழ்ந்த சம்பவம், பல்வேறு கள்ளச்சாரய மரணங்கள், தீ விபத்துகள் மற்றும் அரசு வேலைக்கான வினாத்தாள் கசிவு வழக்குகள் போன்ற பல சம்பவங்களை குஜராத் கண்டுள்ளது. நானும் எனது கட்சியும் சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலமுறை போராடியுள்ளோம். இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, மாவட்ட நீதிபதிகள், காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி) மற்றும் பிற அதிகாரிகளை சந்தித்தோம்” ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா கூறினார்.
“ஆயிரக்கணக்கான முறை அவர்களைச் சந்தித்து, விண்ணப்பங்கள் அளித்தும், நீதிமன்றத்திற்குச் சென்றாலும், குஜராத் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஒவ்வொரு சம்பவத்துக்குப் பிறகும் பா.ஜ.க தலைவர்கள் அபத்தமான அறிக்கைகளால் பொதுமக்களை கொடூரமாக கேலி செய்கிறார்கள். காவல்துறை சரியான பதிலை அளிக்கவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளின் அதிர்ச்சியைத் தாங்கிய பிறகு பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்கான நம்பிக்கையை இழக்கிறார்கள்” என்று கோபால் இத்தாலியா மேலும் கூறினார்.
பின்னர், கோபால் இத்தாலியா வெளியிட்ட ஒரு வீடியோவில், அதில் அவரும் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க போராடி வருவதாகவும், காவல்துறை அதிகாரிகளை சந்தித்து நீதிமன்றத்திற்கு சென்றதாகவும் கூறினார், ஆனால் வீண் என்று கூறினார்.
“இன்று, அம்ரேலி சம்பவம் குறித்து நான் பேசும்போது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், குஜராத்தில் யாருக்கும் நீதி கிடைக்காதது எப்படி? பா.ஜ.க தலைவர்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற கொடூரமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். நான் என்னை நானே பெல்ட்டில் கொண்டேன். நீதியை உறுதிப்படுத்தத் தவறிவிட்டது” என்று அவர் கூறினார்.
குஜராத் மக்களால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியும் என்று கூறிய கோபால் இத்தாலியா, அவரது செயல் "உறங்கிக்கொண்டிருக்கும் மக்களின் ஆன்மாவை" எழுப்பும் என்று நம்புவதாகவும் கூறினார். அது நடந்தால், குஜராத்தில் அநீதிக்கு இடமில்லை என்று ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா உறுதிபடக் கூறினார்.
அண்மையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க அரசை ஆட்சியில் இருந்து நீக்கும் வரை காலணி அணிய மாட்டேன் என்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். அதே போல, குஜராத்தில் நடந்த பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதியை உறுதிப்படுத்தத் தவறியதற்காக" ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.