ஒருபோதும் தோற்பதில்லை; வனவிலங்குகள் கற்றுத்தரும் பாடம்; வைரல் வீடியோ

பெரிய ஞானிகள், அறிஞர்களிடமிருந்தும்தான் வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இல்லை. மிகவும் சாதாரண எளிய மனிதர்களிடமும் ஏன் விலங்குகளிடம் இருந்தும்கூட பாடம் கற்றுக்கொள்ளலாம். அப்படி,...

பெரிய ஞானிகள், அறிஞர்களிடமிருந்தும்தான் வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இல்லை. மிகவும் சாதாரண எளிய மனிதர்களிடமும் ஏன் விலங்குகளிடம் இருந்தும்கூட பாடம் கற்றுக்கொள்ளலாம். அப்படி, ஒரு சிங்கம் கரடியை துரத்தும் வீடியோ ஒரு பெரிய பாடத்தை கற்றுத் தருகிறது.

பொதுவாக உலகில் எல்லா நிகழ்வுகளுமே மனிதனுக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தருபவையாக இருக்கும். ஆனால், மனிதர்கள்தான் ஒவ்வொரு நிகழ்விலும் உள்ள வாழ்க்கைக்கான பாடத்தை கவனிப்பதில்லை. பலரும் வாழ்க்கைக்கான பாடத்தை, தத்துவத்தை பெரிய ஞானிகள், அறிஞர்கள், உயர்ந்த மனிதர்களிடம் இருந்துதான் கற்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் சாதாரண எளிய மனிதர்களாலும் வாழ்வின் மிகப்பெரிய தத்துவத்தை சொல்ல முடியும். சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, வனவிலங்குகள்கூட மனிதனுக்கு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தையும் நம்பிக்கையும் அளிக்க முடியும்.

அப்படி எல்லா மனிதர்களுக்கும் ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் நம்பிக்கையையும் கற்றுத்தரும்படியான ஒரு வனவிலங்கு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவை தாரித்ரி பட்நாயக் என்ற ஒரு பெண் தொழில்முனைவோர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஒரு மலைப் பாங்கான பகுதியில் ஒரு சிங்கம் ஒன்று ஒரு கரடியை வேட்டையாடுவதற்காக துரத்துகிறது. வேகமாக ஓடிவரும் சிங்கத்தைப் பார்த்த கரடி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறது. வீடியோவைப் பார்க்கிற பலரும் இந்த கரடியால் சிங்கத்தைவிட வேகமாக ஓட மூடியாது. சிக்கிக்கொள்ளும் என்று நினைக்கும்போது ஒரு நதியின் குறுக்கே சாய்ந்து கிடக்கும் காய்ந்த மரத்தில் கரடி ஏறுகிறது. சிங்கமும் அதன் பின்னாலேயே ஏறுகிறது. காய்ந்த மரம் என்பதால் கரடி இருந்த பகுதி உடைந்து மரத்துண்டுடன் கரடியும் ஆற்றில் விழுகிறது. ஆற்றில் விழுந்த கரடி சுதாரித்துக்கொண்டு மரக்கட்டையை பிடித்துக்கொண்டு நதி நீரின் போக்கில் செல்கிறது. ஆனால், சிங்கமும் விடுவதாக இல்லை. கரடி ஆற்றில் எங்கே செல்கிறதோ அதுவரை கரையோரமே ஓடுகிறது. கரடியும் உயிர்ப்போராட்டத்தில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் எப்படியாவது உயிர் பிழைத்துவிட வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. சிங்கமும் அந்த கரடியை உணவுக்காக எப்படியாவது வேட்டையாடி விட வேண்டும் என்று பின் தொடகிறது.

நிச்சயமாக இந்த வீடியோ மனிதர்களுக்கு மிகப்பெரிய தத்துவத்தையும் வாழ்க்கைப் பாடத்தையும் சொல்லித் தருகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறாது. விலங்குகள், பறவைளின் மீதான அன்பு வளர்வதற்கு சுஸந்தா நந்தா வனத்துறை அதிகாரியே காரணம் என்று தாரித்ரி பட்நாயக் கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close