Viral Video: இன்றைய சமூக ஊடகங்களின் யுகத்தில் ஒரு நாளைக்கு பல ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகின்றன. அவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் வனவிலங்குகளைப் பற்றிய வீடியோக்கள்தான். வன விலங்குகள் மனிதர்களிடம் ஒரு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அதனாலேயே இணையத்திலும், வனவிலங்குகள் வீடியோக்களைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள்.
அந்த வகையில், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கவால் குரங்குகள், இந்த பலாப்பழம் சீசனில் அதை அறுப்பதற்கு எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பலாப் பழத்தை பிச்சி பலாச் சுளைகளைச் சுவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், இரண்டு சிங்கவால் குரங்குகள் பலா மரத்தில் ஏறி பழுத்த பலப்பழத்தை பற்களால் கடித்தும் வெறும் கைகளால் பிச்சி எடுத்து பலாச் சுளைகளை திண்ணு சுவைக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களை நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “இயற்கையின் கொடையை புத்துணர்ச்சியுடன் சுவைக்கும் சிங்கவால் குரங்குகள்.
சிங்கவால் குரங்குகள் இந்தியாவை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டவை, தென்மேற்கு இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கு மலைகளில் வாழ்கின்றன.” என்று சிங்கவால் குரங்குகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கவால் குரங்குகளைப் பற்றிய வீடியோவைப் பார்த்த எக்ஸ் பயனர் கைலாஷ் கும்ப்கார் என்பவர், “அழகான வீடியோ” என்று கம்மெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், “ஒடிஷாவில் இருந்தும் நல்ல வனவிலங்கு வீடியோக்களை பதிவிடுங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகளைப் போல, கிழக்கு மலைகளும் பல்லுயிர்களைக் கொண்டவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“