viral video: மனிதர்கள் ஒழுங்கை கடைபிடிக்கத் தவறினாலும் விலங்குகள் அவைகளின் ஒழுங்கை கடைபிடிக்கத் தவறுவதே இல்லை. அப்படி சிங்கங்கள் வரிசையாக அமர்ந்து தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சாதுவான மனிதர்கள் கூட கூட்டத்தில் சேர்ந்துவிட்டால் அலட்டல் பேர்வழியாக மாறிவிடுவார்கள். அதுதான் கூட்டத்தின் இயல்பு. கூட்டத்தின் பரபரப்பு அவர்களை மாற்றிவிடும். பொது ஒழுங்கை மீறிவிடுவார்கள். ஆனால், விலங்குகள் கூட்டமாக இருந்தாலும் அவற்றின் இயல்பில் அப்படியே இருக்கும். ஒழுங்கைத் தவற விடுவதே இல்லை.
இந்திய வனத்துறை அதிகாரிகள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வனத்தில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை, புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் பார்வையாளர்கள் இடையே விழிப்புணர்வையும் வனவிலங்குகளைப் பற்றிய ஆர்வத்தையும் புரிதலையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஹேமந்த் மீனா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், 15-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் வரிசையாக வந்து தண்ணீர் குடிக்கின்றன. இந்த வீடியோவைப் பார்க்கும் எவரும் சிங்கங்களுக்குள் கடைபிடிக்கப்படும் ஒழுங்கை மறுக்கவே முடியாது.
காட்டில் சிங்கங்களே ஆனாலும் வரிசையில் வந்து ஒழுங்கை கடைபிடிக்கின்றன. ஆனால், மனிதர்களைப் பாருங்கள் கூட்டம் சேர்ந்தாலே ஒழுங்கை மீறவே செய்கிறார்கள். மனிதர்கள் விலங்குகளிட கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"