சமீப காலங்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில், ஒட்டகச்சிவிங்கி ஒன்றை, சிங்கங்கள் கூட்டமாக தாக்க முயன்ற வீடியோ வைரலாகியுள்ளது.
வீடியோவில், ஒட்டகச்சிவிங்கியை ஒவ்வொரு சிங்கமாக ஆக்ரோஷமாக தாக்க முயல்கிறது. ஆனால், சிங்கத்தை பேக்ஷாட்டிலே டீல் செய்தது ஒன்றை ஒட்டகச்சிவிங்கி. ஆமாங்க, கிட்ட வந்த சிங்கங்களை பின்னாங்காழால் உதைத்து கொடுத்து விரட்டியது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் wildlife stories என்கிற பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. வீடியோவிற்கு, Strong Giraffe” என கேப்ஷன் பதிவிட்டுள்ளனர்.
25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்,ஒட்டகச்சிவிங்கியின் துணிச்சலைக் கண்டு வியப்பில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil