Viral Video: குஜராத் தெருக்களில் இரவில் சிங்கங்கள் கூட்டமாக உலா வரும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் வனவிலங்குகள் வீடியோக்களுக்கு எப்போதுமே நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளத். அதிலும், சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை வீடியோக்கள் பார்வையாளர்களை ஈர்ப்பதில் முக்கியமான வீடியோக்களாக உள்ளன.
காடுகளுக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் வந்து போவது அடிக்கடி நடக்கக் கூடிய ஒன்றுதான். குடியிருப்பு பகுதிகளுக்குள் புலி, சிறுத்தை, கரடி, யானை வந்து போவது என்பது அடிக்கடி நடக்கக்கூடிய நிகழ்வுகள்தான். ஆனால், கூட்டமாக வந்தால் ஏன செய்ய முடியும்?
அந்த வகையில், குஜரத் மாநிலத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களில் நள்ளிரவு நேரத்தில் சிங்கங்கள் கூட்டமாக ரோந்து வரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
குஜராத்தில் தெருக்களில் சிங்கங்கள் கூட்டமாக உலாவருகின்றன. தூரத்தில் ஒரு வாகனத்தின் வெளிச்சம் தெரிகிறது. இதையடுத்து, சிங்கங்கள் வந்த வழியாகவே திரும்பிச் செல்கின்றன. இந்தக் காட்சி அங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் இந்த வீடியோ குறித்து குறிப்பிடுகையில், “மற்றொரு நாள், இன்னொரு பெருமை… குஜராத் தெருக்களில் நடைபயிற்சி” என்று சிங்கங்கள் கூட்டமாக உலா வருவதைக் குறிப்பிட்டுள்ளார்.
இரவு நேரத்தில் தெருக்களில் சிங்கங்கள் கூட்டமாக உலாவரும் வீடியோ பார்க்கும்போதே மிரட்டலாக இருக்கிறது. என்ன இருந்தாலும் சிங்கம் இல்லையா? குஜராத் தெருக்களில் நள்ளிரவில் சிங்கங்கள் கூட்டமாக உலா வரும் காட்சியை நீங்களே பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"