scorecardresearch

சிங்கங்களை அலறவிட்ட யானைகள்… காட்டின் ராஜா மிரண்டு ஓடிய வைரல் வீடியோ

இந்த வீடியோ animalcoterie என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

சிங்கங்களை அலறவிட்ட யானைகள்… காட்டின் ராஜா மிரண்டு ஓடிய வைரல் வீடியோ

யானைகளின் எதிரியாக இயற்கையாக இருப்பது சிங்கங்கள் தான். அவை கூட்டமாக நகர்ந்து வேட்டையாடுகின்றன.மனிதர்களைத் தவிர, யானையைக் கொல்லும் சக்தி வாய்ந்த வேட்டையாடுபவர்கள் சிங்கங்கள் மட்டுமே. பெண்களை விட 50% எடை அதிகமாக இருக்கும் ஆண் சிங்கங்கம், வேட்டையாடும் பணியை எளிதாக செய்திடும். யானையைக் கொல்வதற்கு பொதுவாக ஏழு சிங்கங்கள் தேவைப்படும், ஆனால் இரண்டு ஆண் சிங்களால் தனியாகவே அதை செய்து காட்ட முடியும். அதே சமயம், யானை கூட்டமாக செல்கையில், ஏழு சிங்கங்கள் சேர்ந்தாலும் அதனை வென்றுகாட்டுவது கடினமாகும்.

யானை, சிங்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகும் போது அது சமூக வலைதளங்களில் வைரலாகுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, யானையை கண்டு சிங்கக்கூட்டம் பயந்து ஓடும் வீடியோ வைரலாகிறது.

இந்த வீடியோ ‘animalcoterie’என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. சுமார் 35 ஆயிரம் பார்வையாளர்களை பெற்றிருந்தது.

யானைகள் கூட்டத்தில் இருந்து எப்போது இளம் யானை தனியாக சிக்கும் என சிங்கக்கூட்டம் காத்திருப்பதை வீடியோவில் காணமுடிகிறது. ஆனால், யானைகளோ சிங்கத்திடம் தங்களது விளையாட்டை காட்ட முடிவு செய்தது. சிங்க்ககூட்டத்தை நோக்கி வேகமாக வர தொடங்கியது. உடனே சுதாரித்துகொண்ட சிங்கங்கள், பயந்த பூனை போல் ஓட தொடங்கியது. கடைசியாக தனியாக நின்ற ஆண் சிங்கம், யானை கூட்டம் மிக அருகில் வந்ததால் பயத்தில் அதுவும் தலைதெறிக்க ஓடியும். கும்பலாக இருக்கையில் அவர்கள் தான் காட்டிற்கு ராஜா என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Lions runs away while elephant chase them video viral