New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/03/Other-children-are-also-seen-amused-by-her-steps-sitting-in-the-background-along-with-two-women..jpg)
பள்ளி சீருடையில் சுட்டி சிறுமி கை கால்களை அசைத்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வங்காள மொழிப் பாடலான ‘கச்சா பாதாம்’ இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் ட்ரெண்டாகியுள்ளது. பல பிரபலங்களும், கச்சா பாதாம் பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். பெரியர்வர்கள் முதல் குட்டீஸ் வரை கவர்ந்த பாடலுக்கு, அங்கன்வாடி சிறுமி ஆடிய வீடியோ அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த ஆடல், பாடல் என ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அந்த வகையில் , அங்கன்வாடி பள்ளியில் சிறுமி கச்சா பாதா பாடலுக்கு முகத்தில் புன்னகையுடன் கை கால்களை அசைத்து நடனமாடுகிறார்.மற்ற குழந்தைகளும் ஆசிரியர்களுடன் அமர்ந்து டான்ஸை பார்க்கின்றனர்.
இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவானிஷ் சரன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 15 விநாடி ஓடும் வீடியோ, சுமார் 13 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
Cutest ‘कच्चा बादाम’ ❤️ pic.twitter.com/YRln8CNA4X
— Awanish Sharan (@AwanishSharan) March 13, 2022
வீடியோவை பகிர்ந்த நேஹா கந்தாரியா என்பவர், இந்தச் சிறுமி குஜராத்தின் வபூமி துவாரகாவில் அங்கன்வாடி பள்ளியைச் சேர்ந்தவர் ஆவர். நகர்ப்புறங்களில் மட்டுமே ட்ரெண்ட் இருக்கிறது என கிடையாது. தற்போது, கிராமங்களிலும் அதிகளவில் பரவி வருகிறது என பதிவிட்டிருந்தார்.
இந்த கச்சா பாதாம் பாடலை ஒரிஜனலாக பாடியவர், மேற்கு வங்கத்தை சேர்ந்த பூபன் பத்யாகர் என்ற கடலை வியாபாரி ஆகும். இவர் தனது வியாபாரத்தை பெருக்குவதற்காக பாடிய பாடல், லை இசையமைப்பாளர் நஸ்மு ரீசட் ‘ரீமிக்ஸ்’ செய்யப்பட்டு உலகெங்கும் எதிரொலித்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.