New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/05/sachin-4.jpg)
viral video
சிறுமி ஆபத்து என கத்தினால் போதும் எங்கிருந்தாலும் அந்த கிளி பறந்து சென்று
viral video
பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக இருக்கும் இந்த சமூதாயத்தில் சிறுமிக்கு கிளி ஒன்று காவலாக 24 மணி நேரமும் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
பெண்கள் பாலியல் கொடுமை, கல்லூரி பெண்கள் கற்பழிப்பு, இளம் பெண்ணிடம் அத்துமீறல் என செய்தித்தாளில் படித்து, காதுகளில் கேட்டு அடக்க முடியாத கோபத்தை வெளிப்படுத்திய நம்முடைய நெஞ்சங்கள் இப்போது 2 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, பச்சிளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து பலி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு என கேள்விப்பட்டு ரத்த கண்ணீர் வடிக்கிறது.
அது சிறுமிகளாக இருந்தாலும் சரி, வளர்ந்த பெண்களாக இருந்தாலும் சரி மொத்தத்தில் பெண்களாக பிறந்தாலே இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் பெற்றோர்கள் தொடங்கி எல்லோருக்குமே வந்து விட்டது. பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் வீட்டில் உள்ளவர்கள் பதுறுகிறார்கள். தொலைக்காட்சி தொடங்கி சோஷியல் மீடியாவிலும் பெண்கள் பாதுகாப்பு குறித்த வீடியோக்கள், மெசேஜ்கள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
My niece has her bird trained to attack anyone she screams at ???????????? pic.twitter.com/ea0JoWMNrT
— Lord Flocko ???? (@Apex_sH) 30 April 2019
அந்த வகையில் சிறுமி ஒருவர் தனது பாதுகாப்பிற்காக கிளி ஒன்றை வளர்க்கிறாள். அவளை யாரேனும் தொந்தரவு செய்தாலோ அல்லது தாக்கினாலோ சிறுமி ஆபத்து என கத்தினால் போதும் எங்கிருந்தாலும் அந்த கிளி பறந்து சென்று எதிராளியை தாக்கும். அப்படித்தான் அந்த சிறுமி தனது வளர்ப்பு கிளிக்கு பயிற்சி அளித்துள்ளார்.
இதுக் குறித்த வீடியோ நேற்று முன் தினம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை 24 மில்லியனுக்கு மேலான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.