மான் குட்டியை விழுங்கிய மலைப் பாம்பின் வயிற்றில் இருந்து மான் குட்டியை மீட்கும் நோக்கில் உள்ளூர் மக்கள் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், இவர்கள் செய்தது சரியா, தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், நெட்டிசன்கள் காரசாரமான விவாதம் நடத்தி வருகின்றனர்.
வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் பலரும் வனத்தில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பயனர்களுக்கு காட்சிக்கு விருந்தாக மட்டுமில்லாமல் வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில், மான் குட்டியை விழுங்கிய மலைப் பாம்பின் வயிற்றில் இருந்து மான் குட்டியை மீட்கும் நோக்கில் உள்ளூர் மக்கள் செயல்படுகிறார்கள். மான்குட்டியை மீட்கிறார்கள். ஆனால், அது ஏற்கெனவே இறந்துவிட்டிருக்கிறது. இந்நிலையில், உள்ளூர்வாசிகள் செய்தது சரிதானா என்று பர்வீன் கஸ்வான் கேள்வி எழுப்பியுள்ளார்.
In a recent viral video some locals try to save a Nilgai calf after it was swallowed by a python. What do you think; is it right to interfere like this in natural world. Or they did right thing. pic.twitter.com/Qgxk0MPUq0
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 12, 2024
இமாசல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று மான் குட்டியை பிடித்து விழுங்கியுள்ளது. இதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் சிலர், மான் குட்டியை மீட்கும் நோக்கில் பாம்பின் வயிற்றில் இருந்து மான் குட்டியை வாய் வழியாக வெளியே தள்ளும் விதமாக செயல்பட்டனர். இறுதியில் அந்த மலைப் பாம்பு விழுங்கிய மான்குட்டியை கக்கி விடுகிறது. ஆனால், அந்த மான் ஏற்கெனவே இறந்துபோய்விட்டிருக்கிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், “சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், மலைப்பாம்பு விழுங்கிய நீலகைக் மான் குட்டியைக் காப்பாற்ற உள்ளூர்வாசிகள் சிலர் முயற்சித்துள்ளனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்; இயற்கை உலகில் இப்படி தலையிடுவது சரியா? அல்லது அவர்கள் செய்தது சரிதானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி பலரும் கருத்து தெரிவித்து காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். புளூ புல் வகையை சேர்ந்த இந்த மான் இனம், வனவாழ் பாதுகாப்பு சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட பட்டியலில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை வேட்டையாடுவது சட்டவிரோதம் ஆகும். இந்த வீடியோவை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். உங்களுடைய கருத்து என்ன நீங்களும் பதிவிடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.