ரயில் ஓட்டுநரான லோகோ பைலட் ஜே.டி. தாஸ் மற்றும் அவரது உதவியாளர் உமேஷ் குமார் ஆகியோர், அக்டோபர் 16-ம் தேதி குவஹாத்தியில் இருந்து லும்டிங்கிற்கு காம்ரூப் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கினர். அப்போது, ஹபாய்பூர் மற்றும் லாம்சகாங் இடையே உள்ள பகுதியில் ரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்ற சுமார் 60 யானைகள் கூட்டத்தின் மீது மோதாமல் உடனடியாக ரயிலை நிறுத்திக் காப்பாற்றியதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Watch: Loco pilots win plaudits for saving nearly 60 elephants from getting crushed under train in Assam
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) அடிப்படையிலான ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு (ஐ.டி.எஸ்) மூலம் எச்சரிக்கப்பட்ட பிறகு, ரயில் ஓட்டுநர்கள் அவசரகால பிரேக்கைப் பயன்படுத்திர ரயிலை நிறுத்தினர்.
வளர்ந்த பெரிய யானைகள், கன்றுகள் என பல பல யானைகள் ரயில் பாதையை கடக்கும் இந்த வைரல் வீடியோ காட்டுகிறது. “யானைகளைப் பாருங்கள், இது ஒரு யானை மந்தை” என்று ஒரு நபர் வீடியோவில் கூறுகிறார். யானைகள் ரயில்வே தண்டவாளத்தை வேகமாக கடப்பதற்காக பலர் பட்டாசுகளை கொளுத்துகிறார்கள்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார், யானைகள் ரயில் பாதையைக் கடக்கும்போது, உடனடியாக ரயிலை நிறுத்தி யானைகள் மீது மோதாமல் காப்பாற்றியதற்காக சுப்ரியா சாஹு ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட்களைப் பாராட்டினார். “அற்புதமான பார்வை! 15959 காம்ரூப் எக்ஸ்பிரஸின் லோகோ பைலட் தாஸ் மற்றும் உதவி லோகோ பைலட் உமேஷ் குமார் ஆகியோர் அக்டோபர் 16-ம் தேதி ஹபாய்பூர் மற்றும் லாம்சகாங் இடையே, சுமார் 60 யானைகள் கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது அவசரகால பிரேக் போட்டு காப்பாற்றியதற்காக அவர்களின் விரைவான மற்றும் வீரதீர செயலுக்காக ஒரு பெரிய பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
“செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்டறிதல் அமைப்பு மூலம் ரயில் ஓட்டுநர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர், இது பாதையை முழுமையாக உள்ளடக்கியது. இந்தச் சம்பவம் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, இது போன்ற அருகில் நடக்கும் விபத்துகளைத் தடுக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ 6, 32,00,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த சமூக ஊடக பயனர்கள் லோகோ பைலட்களைப் பாராட்டியதால், வீடியோ பல கமெண்ட்களைப் பெற்றுள்ளது.
ஒரு பயனர் எழுதினார், “நல்ல முயற்சி. இந்த ஏ.ஐ அடிப்படையிலான விழிப்பூட்டல் அமைப்பைக் கண்டுபிடித்து, அதைச் செயல்படுத்தி, விழிப்பூட்டல்களைப் பெறுவதில் விரைவாகச் செயல்படுவதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி. பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவான நடவடிக்கைக்காக 60 யானைகளின் உயிரைக் காப்பாற்றிய அந்த 2 லோகோ பைலட்களுக்கு ஒரு மில்லியன் நன்றி. சில நாட்களுக்கு முன்பு லோகோ (ரயில்) மோதியதில் ஒரு யானை உயிர் இழந்த நேரத்தில் இது பெரும் ஆறுதலைத் தருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இது அருமை. லோகோ பைலட்களுக்கு வாழ்த்துகள்,” என்று மூன்றாவது பயனர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“