/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-13T222824.052.jpg)
lone lion faces hyenos, lone lion fights with hyenas, ஒற்றைச் சிங்கம், கழுதைப்புலி கூட்டம், வைரல் வீடியோ, lion faces hyenas, viral video, viral video news, latest viral news, latest video news in tamil, wild animals video news
வீரத்திற்கு உவமையாக பலரும் சிங்கத்தைதான் கூறுவார்கள். அப்படி ஒற்றை சிங்கம் சிங்கிளாக இருக்க பெருங்கூட்டமாக சுற்றி வளைத்த கழுதைப் புலிகளைப பார்த்து மிரளாமல் சிங்கம் தனது கர்ஜனையாலேயே கலங்கடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

காற்றில் ஒற்றைச் சிங்கமும் ஒற்றை யானையும் வலிமையானவை தைரியமானவை என்று கூறுவார்கள். சிங்கங்கள் பெரும்பாலும் தனித்து சென்று வேட்டையாடும் தன்மை கொண்டவை. அதனால், தான் சினிமா பஞ்ச் வசனங்களில் கூட சிங்கம் சிங்கிளாதான் வரும் என்று ஹீரோக்களின் கெத்தை காட்டுவதற்காக சொல்லப்படுகிறது.
அப்படி, சிங்கம் ஒன்று சிங்கிளாக இருக்க, கூட்டமாக சென்று வேட்டையாடும் கழுதைப் புலிகள் சிங்கத்தை வட்டமிட்டு நிற்கின்றன. ஆனால், அந்த பெண் சிங்கம் சிங்கிளாக நின்று தனது கர்ஜனையாலேயே கழுதைப்புலி கூட்டத்தை கலங்கடிக்கிறது.
Never underestimate the power of a lone female. She is in pain, yet dares to fight back. All this is for survival. via YT pic.twitter.com/ijeKrTCvEr
— Sudha Ramen IFS ???????? (@SudhaRamenIFS) June 12, 2020
சிங்கம் சிங்கிளாக கர்ஜிக்கும் வீடியோவை வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் குறிப்பிடுகையில், “தனித்து இருக்கும் ஒற்றை பெண் சிங்கத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். அது வலியுடன் இருக்கிறது. அது மீண்டும் சண்டையிட துணிகிறது. இது எல்லாம் உயிர் வாழ்வதற்காகத்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், இந்த வீடியோ சிங்கத்தின் தைரியத்தை கம்பீரத்தை பறைசாற்றுவதாக உள்ளது. ஒரு ஒற்றை பெண் சிங்கம் இருக்கிறது. அதை பெருங்கூட்டமாக கழுதைப் புலிகள் தாக்குவதற்கு சுற்றிவளைக்கின்றன. ஆனால், காட்டு ராஜா இல்லை காட்டு ராணி சிங்கம் தனது கர்ஜனையால் அந்த கழுதைப் புலிகளைக் நெருங்கவிடாமல் கலங்கடிக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.