தமிழ் சினிமாவுக்கு புதுப் பாடகி கிடைச்சிருக்காங்க..! யாருன்னு பாருங்க

பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபிரபலம் லாஸ்லியா, சூர்யாவின் பிரபலமான பாடலைப் பாடி டிக்டாக் செய்து பாடகியாக அவதாரம் எடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இதனால், நெட்டிசன்கள்...

Bigg Boss Celebrity Losliya : பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபிரபலம் லாஸ்லியா, சூர்யாவின் பிரபலமான பாடலைப் பாடி டிக்டாக் செய்து பாடகியாக அவதாரம் எடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இதனால், நெட்டிசன்கள் தமிழ் சினிமாவுக்கு புதுப்பாடகி கிடைச்சாச்சு என்று கூறிவருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களுமே தமிழ் டிவி நிகழ்ச்சிகளுக்கும் தமிழ் சினிமாவுக்கும் சில பிரபலங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி அடையாளம் காட்டியது.

அந்த வகையில், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியி பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா எப்போதும் புன்னகையுடன் இருக்கும் தனது இயல்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் லாஸ்லியா ஆர்மி உருவாக்கி அவருகு ஆதரவாக சமூக ஊடகங்களில் செயல்பட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, லாஸ்லியாவுக்கும் சக போட்டியாளர் கவினுக்கும் இடையே காதல் மலர்ந்தது. லாஸ்லியா – கவின் காதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி பரப்பாக்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு, கவினும் லாஸ்லியாவும் தங்கள் காதல் விவகாரம் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், லாஸ்லியா அடுத்தடுத்து, 4 படங்களில் ஹிரோயினாக புக் ஆகி நடிக்கத் தொடங்கிவிட்டார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகத்தைக் கொண்டு தமிழ் சினிமா உலகத்திற்குள் நுழைந்துள்ள லாஸ்லியா சினிமாவில் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சினிமா, டிவி பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக ஊடகப்பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக அறிமுகமாகி நடிகையாக புரோமோஷன் அடைந்துள்ள லாஸ்லியா, விக்ரம் – சூர்யா நடித்த பிதாமகன் படத்தில் இடம்பெற்ற இளங்காற்று வீசுதே பாடலைப் பாடி டிக்டாக் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு லாஸ்லியா வந்தபோது, ரசிகர்கள் தமிழ் சினிமாவுக்கு க்யூட்டான புது நடிகை கிடைச்சாச்சு என்று கூறினார்கள். இப்போது, லாஸ்லியா பாடுவதைக் கேட்டு தமிழ் சினிமாவுக்கு புதுப்பாடகி கிடைச்சுருக்காங்க என்று கூறி பாராட்டி வருகின்றனர். லாஸ்லியா ‘மனசில என்ன ஆகாயம்…’ என்று பாடி அச்சத்தியுள்ள வீடியோ சமூக ஊடங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close