சாலையோர உணவுகளில் மக்களால் அதிகம் விரும்பப்படும் பானிபூரியில், புது புது சுவாராஸ்யமான காம்பினேஷன்களை சேர்த்து விற்பனை செய்வதை சமீப காலமாக பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், தற்போது லக்னோவை சேர்ந்த சாலையோர வியாபாரி, ‘சௌமீன் கோல்கப்பா’ ‘chowmein golgappa’. அறிமுகம் செய்துள்ளார்.
அந்த நூடுல்ஸ் பானிபூரியை தயாரிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி, உணவு பிரியர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில், பானிபூரியில் உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, பல மசாலா பொடிகள் மற்றும் சாஸ் ஆகியவற்றைச் சேர்க்கிறார். பின்னர், அதன் மீது நூடுல்ஸை போட்டுவிட்டு, மீண்டும் சாஸை ஊற்றுகிறார்.
இறுதியாக, அதன் மீது தயிரையும் ஊற்றுகிறார். அவ்வளவு தான் முடிந்தது என நினைத்தால், உணவை அலங்கரிக்க அதன் மீது டூட்டி ஃப்ரூட்டி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கிறார். இதுதவிர பானிபூரி நூடுல்ஸ் சாப்பிட சட்டினியும் வைக்கிறார்.
இந்த வீடியோவை பதிவிட்ட ஆர்ஜே ரோஹன், ” ஹலோ நண்பர்களே…உங்கள் பானிபூரி நண்பனை டேக் செய்யுங்கள்” என தெரிவித்திருந்தார்.
முன்னதாக, குஜராத்தில் நெருப்பு பானி பூரியின் காணொலி வெளியாகி சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil