/tamil-ie/media/media_files/uploads/2018/07/m.karunanidhi-mk-stalin........................jpg)
M.Karunanidhi-MK Stalin, Song
திமுக தலைவர் கருணாநிதி, பொதுவெளிகளில் பலமுறை மு.க.ஸ்டாலினுடன் நெருக்கமாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். பிறந்த நாள் வாழ்த்து பெற வந்தால் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது, முகத்தோடு அணைத்துக் கொள்வது இப்படி பல!
இப்படி கருணாநிதியும், ஸ்டாலினும் நெருக்கமாக தோன்றிய காட்சிகளை ஒரு பாடலுடன் இணைத்து இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். வயதான தாய், தந்தையரை மிகவும் பரிவுடன் மகன்கள் பார்த்துக் கொள்வதை உணர்த்தும் பாடல் அது!
கவியரசர் கண்ணதாசன் வரிகளில் ராமு படத்திற்காக பி.சுசீலா பாடிய அருமையான பாடல் அது! கலைஞரை நோக்கி ஸ்டாலின் பாடுவதாக அந்த வரிகளை கற்பனை செய்து கொள்கிறார்கள் உடன்பிறப்புகள். நீங்களும் அந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள்!
கருணாநிதியின் உதவியாளரான நித்யா தனது பிறந்த நாளையொட்டி ஸ்டாலினுக்காக இந்தப் பாடலை உருவாக்கியதாக சொல்கிறார்கள்.
பாடல் வரிகள் இங்கே:
திரைப்படம்: ராமு
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்: பி. சுசீலா
ஆண்டு: 1966
பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
அள்ளித் தந்த அன்னை சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நானல்லவோ?
அள்ளித் தந்த அன்னை சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நானல்லவோ?
கட்டித் தங்கம் என்று கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ
கட்டித் தங்கம் என்று கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ
பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
பெட்டைக் கிளி கொஞ்சும் பிள்ளைக் கிளி பாடும்
தந்தைக் கிளி அங்கே தேடி வரும்
பெட்டைக் கிளி கொஞ்சும் பிள்ளைக் கிளி பாடும்
தந்தைக் கிளி அங்கே தேடி வரும்
இன்பம் என்ற போதும் துன்பம் வந்த போதும்
என்றும் எங்கள் சொந்தம் மாறாது
இன்பம் என்ற போதும் துன்பம் வந்த போதும்
என்றும் எங்கள் சொந்தம் மாறாது
பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.