/indian-express-tamil/media/media_files/2025/10/09/people-send-off-ias-2025-10-09-12-23-30.jpg)
மத்தியப் பிரதேசம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சமஸ்கிருதி ஜெயினுக்கு உணர்ச்சிபூர்வமான விடைபெற்றதுசியோனி கலெக்டராக 15 மாத காலம் பணியாற்றியபோது, பல தாக்கத்தை ஏற்படுத்திய முயற்சிகளுக்காக ஜெயின் அங்கீகரிக்கப்பட்டார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சம்ஸ்கிருதி ஜெயினுக்கு மத்தியப் பிரதேசத்தின் சிவனி மாவட்டத்தில், அவரது புதிய பணியான போபாலுக்குச் செல்லும் முன், மிக பிரமாண்டமான மற்றும் மனதை உருக்கும் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
தங்க நிறப் பல்லக்கு ஒன்றில் தனது இரண்டு இளம் மகள்களுடன் அமர்ந்திருந்த ஜெயினை, அவரது ஊழியர்கள் மற்றும் சகாக்கள் தூக்கிச் சென்று மரியாதையை வெளிப்படுத்தினர். இசை மற்றும் வாழ்த்துகளுக்கு மத்தியில் இந்தப் பிரியாவிடை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த உற்சாகமான நிகழ்வைப் படம்பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் நலப் பணிகளுக்காகப் பாராட்டப்பட்டவர்
சிவணியின் புதிய ஆட்சியராக சீத்தலா பாட்லே அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வாக இது அமைந்தது. இதற்கிடையில், தற்போது போபால் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயினுக்குப் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
An MP IAS officer Sanskriti Jain, Collector Seoni,was given a unique farewell by her staff. Unheard of before.
— Abhilash Khandekar (@Abhikhandekar1) October 5, 2025
Many officers hv been popular during their postings owing to people-oriented works & honesty, yet this was something new.
Let more officers be like her.@IASassociationpic.twitter.com/wsebdt9ELw
இந்தியா டுடே வெளியிட்ட செய்திப்படி, சிவனி ஆட்சியராகப் பணியாற்றிய தனது 15 மாத காலத்தில், ஜெயின் பல தாக்கத்தை ஏற்படுத்திய முன்முயற்சிகளுக்காகப் பாராட்டப்பட்டார். குறிப்பாக, அவர் 'லாட்லி பெஹன்' திட்டத்தை அட்டல் பென்ஷன் யோஜனாவுடன் இணைத்தார். மேலும், சமூகப் பங்கேற்புத் திட்டங்கள் மூலம் ஆரம்பப் பள்ளிகளுக்கு மேசைகள் மற்றும் பெஞ்சுகளை வழங்கி ஆதரவளித்தார். அடிப்படை நிலையில் உள்ள மக்களையும் உள்ளடக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அவரது பதவிக் காலம் பரவலாகப் பாராட்டப்பட்டது.
ராணுவப் பின்னணி மற்றும் ஐ.ஏ.எஸ் பயணம்
1989 பிப்ரவரி 14-ல் ஸ்ரீநகரில் பிறந்த சம்ஸ்கிருதி ஜெயின், ஒரு வலுவான விமானப்படை பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார் — அவரது தந்தை ஒரு போர் விமானி, அவரது தாயார் மருத்துவப் பிரிவில் பணியாற்றினார். அடிக்கடி பணி இடமாற்றம் காரணமாக, அவர் இந்தியா முழுவதும் 6 வெவ்வேறு பள்ளிகளில் கல்வி கற்றார்.
பி.ஐ.டி.எஸ் பிலானி (BITS Pilani - கோவா வளாகம் பட்டதாரியான ஜெயின், ஆரம்பத்தில் முனைவர் பட்டம் படிக்க நினைத்தார். இருப்பினும், ஒரு நண்பரின் ஆலோசனையின் பேரில் அவர் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகி, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர், இரண்டாவது முயற்சியில் ஐ.ஆர்.எஸ் (IRS) பதவியைப் பெற்ற அவர், தனது மூன்றாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ் (IAS) பணிக்குத் தேர்வானார். அதில், 2014-ம் ஆண்டு அகில இந்திய அளவில் 11-வது இடத்தைப் பெற்று அசத்தினார்.
2015-ம் ஆண்டு மத்தியப் பிரதேசப் பிரிவின் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகச் சேர்ந்ததிலிருந்து, சம்ஸ்கிருதி ஜெயின் பல முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவற்றில் ரேவா மாநகராட்சி ஆணையர், சத்னா கூடுதல் ஆட்சியர், மௌகஞ்ச்-ன் எஸ்.டி.எம், மற்றும் அலிராஜ்பூர், நர்மதாபுரம் மாவட்டப் பஞ்சாயத்துகளின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) ஆகியவை அடங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.