New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/07/madhyapradesh-schoo-2025-07-07-12-30-22.jpg)
4 லிட்டர் பெயிண்ட் அடித்த 233 தொழிலாளர்கள்... செலவு மட்டும் ரூ. 1.07 லட்சம்; இணையத்தில் வைரலாகும் பில்!
அரசு நிதி எவ்வாறு வீணடிக்கப்படுகிறது அல்லது முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சியூட்டும் உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
4 லிட்டர் பெயிண்ட் அடித்த 233 தொழிலாளர்கள்... செலவு மட்டும் ரூ. 1.07 லட்சம்; இணையத்தில் வைரலாகும் பில்!
மத்தியப் பிரதேசம் மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசுப் பணியின் செலவீன விவரங்கள் பொது மக்களை திகைக்க வைத்துள்ளது. சகண்டி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள ஒரு சுவரில் 4 லிட்டர் பெயின்ட் அடிக்க 165 தொழிலாளர்கள் மற்றும் 68 கொத்தனார்கள் பணியமர்த்தப்பட்டதாக பில் சமர்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த பில் வைரலானது. 4 லிட்டர் பெயின்ட் அடிக்க ரூ.1.07 லட்சம் செலவானது தெரியவந்துள்ளது.
அதேப்போல நிபானியா கிராமத்தில் உள்ள மற்றொரு இடத்தில் 20 லிட்டருக்கு ரூ.2.3 லட்சம் செலவாகியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நிபானியாவில் 10 ஜன்னல்கள் மற்றும் நான்கு கதவுகளில் வேலை செய்ய 275 தொழிலாளர்களும் 150 கொத்தனார்களும் பணியமர்த்தப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் ஆவணங்களிலும் குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பணியை மேற்கொண்ட கட்டுமான நிறுவனமான சுதாகர் கன்ஸ்ட்ரக்ஷன், மே 5, 2025 தேதியிட்ட பில்லை சமர்பித்துள்ளது, ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பே ஏப்ரல் 4 அன்று - நிபானியா பள்ளியின் முதல்வரால் அந்த பில் சரிபார்க்கப்பட்டதாகக் கணக்குகாட்டப்பட்டுள்ளது.
சட்டப்படி இந்த பில்களில் பணிக்கு முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த பில்களில் எந்தப் புகைப்படமும் இணைக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி மாவட்ட கல்வி அலுவலர் பூல் சிங் மார்பாச்சி, "சமூக வலைத்தளங்களில் வைரலான பில்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டறியப்படும் உண்மைகள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.