Advertisment

மாமானாரை நடுத்தெருவில் அனாதையாக இறக்கி விட்ட மதுரை மருமகள்: சி.சி.டி.வி காட்சியால் பரபரப்பு

90 வயது முதியவரை மருமகள் ஆட்டோவில் வந்த அழைத்துச் வந்து ஆடு மாடுகளுக்கு நடுவில் தெருவில் இறக்கிவிட்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai daughter in law leaves father in law like orphan middle of road CCTV footage Tamil News

மாமானாரை நடுத்தெருவில் அனாதையாக இறக்கி விட்டுச் சென்ற மதுரை மருமகளின் சி.சி.டி.வி காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மதிச்சியம் ஆழ்வார்புரம் பகுதியில் 90 வயதான பெரியவர் ஒருவர் கடும் குளிரில் நடுங்கி நடுரோட்டில் கிடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. உடனே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின் பேரில் மதுரை சமூகத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Advertisment

அவரிடம் விசாரித்த போது மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த  மருதுபாண்டி என்பரின் தந்தை வெங்கடாசலம் என தெரிய வந்தது. அவர் டெய்லர் வேலை செய்து வந்த நிலையில்,  கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மகன் மருதுபாண்டி ஆர்ட்டிஸ்ட் வேலை பார்த்து வருவதாகவும் மருமகள் ஆட்டோவில் ஏற்றி வந்து இங்கே விட்டு விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

முதியவருக்கு உரிய கவுன்சிலிங் அளித்து முதியவரின் சிகிச்சை முடிந்து உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுவார் என்று தனியார் தொண்டு நிறுவன அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். 90 வயது  முதியவரை மருமகள் ஆட்டோவில் வந்த அழைத்துச் வந்து ஆடு மாடுகளுக்கு நடுவில் தெருவில் இறக்கிவிட்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  அந்த வீடியோவில் மாமனாரை அழைத்து வரும் அந்த பெண் சாலையோரம் ஆடு மாடுகளுடன் விட்டுச் சென்ற  காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Madurai Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment