மதுரையில் பூ விற்பனை செய்யும் பெண் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான அலெக்ஸ் அவுட்வெயிட் தலையில், மல்லிகைப்பூ வைத்து அன்பை வெளிப்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
பயணங்கள் எப்போதும் பல்வேறு கலாச்சாரங்களை கண்டு மகிழ உதவுகிறது. பயணம் ஒருவரின் மனநிலையை விசாலப்படுத்துகிறது. தென்னிந்தியாவில் பெண்களுக்கு பூக்கள் மீது ஒரு பெரிய ஆசை இருக்கும். அதிலும் பெரும்பாலான பெண்கள் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான அலெக்ஸ் அவுட்வெயிட், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாட்டின் மதுரைக்கு வந்துள்ளார். அப்போது, மதுரையில் பூ விற்பனை செய்யும் ஒரு பெண் உடன் நட்பு ஏற்படுகிறது. பூ விற்பனை செய்யும் பெண் அந்த இங்கிலாந்து பெண்ணுக்கு தலை நிறைய மல்லிகைப் பூவை வைத்து விடுகிறார். நாடுகளின் எல்லைகள் கடந்து இங்கிலாந்து பெண்ணுக்கும் மதுரை பூ விற்பனை செய்யும் பெண்ணுக்கும் இடையேயான நட்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
அலெக்ஸ் அவுட்வெயிட் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், பூக்காரம்மா மல்லிகைப் பூவை அலெக்ஸ் வெயிட் தலையில் வைக்கிறார். அவுட்வெயிட் பூ விற்பனை செய்யும் அருகில் அமர்கிறார். அவரிடம் பூக்காரம்மா பூக்கடையில் உள்ள பூக்களைப் பற்றி கூறுகிறார். அவுட்வெயிட் மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார். பூக்காரம்மா அலெக்ஸ் அவுட்வெயிட் தலையில் வாசனை மிக்க மல்லிகைப்பூவை தலை நிறைய வைக்கிறார்.” இந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
அலெக்ஸ் அவுட்வெயிட் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தமிழ்நாட்டில் தனது பயண அனுபவத்தைப் பற்றி கூறுகிறார். “நவம்பரில் நான் தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு மாதம் இருந்தேன். தமிழ்நாட்டில் நிறைய அழகான இடங்கள் உள்ளன. நீண்ட கடற்கரை, மலைப் பிரதேசங்கள் மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் மற்றும் கலைகளில் கவனம் செலுத்துகிறது. எப்பொழுதும் போல, எனக்குப் பிடித்த சில தருணங்கள் திட்டமிடப்படாத புதியவர்களைச் சந்திப்பது. எனது புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘காலம் கடந்த தமிழ்நாடு’ இன்று @travelxptv-யில் வெளியாகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த பூவிற்காக பணம் செலுத்தியதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “நான் ஒரு டிவி தொகுப்பாளினி. நான் தமிழ்நாட்டில் ஒரு பயண நிகழ்ச்சியை படமாக்கிக் கொண்டிருந்தேன். ஆம், நாங்கள் பூக்களுக்கு பணம் கொடுத்தோம் – அது அவளுடைய தொழில், நிச்சயமாக நாங்கள் பணம் கொடுத்தோம். இல்லை, நான் ஒரு மிஷனரி அல்ல. எனது நண்பரை மேற்கோள் காட்டுவதற்காக… “அலெக்ஸ் எப்போதாவது லூர்துக்குச் சென்றால் உணர்ச்சிவசப்படுவாள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இங்கிலாந்து பத்திரிகையாளர் அலெக்ஸ் அவுட்வெயிட் செவ்வாய்க்கிழமை பகிர்ந்துள்ள இந்த வீடியோவை 4.7 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த கலாச்சார கலவை ஆன்லைனில் பலரின் இதயங்களை நெகிழச் செய்திருக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு நெட்டிசன், “அட!! இன்று நான் பார்த்த மிக அழகான விஷயம், சிறந்த கலாச்சார கலப்பு. அலெக்ஸ் அவுட்வெயிட் நீங்கள் மல்லிப்பூவை விரும்பி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மற்றொரு பயனர் எழுதினார், “இது சிறப்பு… தென்னிந்தியாவில் பூக்களுக்கு ஒரு தனி இடம் உண்டு… பெரும் அன்பு…” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், “நீங்கள் அந்த பூக்களை வைத்துக்கொண்டபோது மிகவும் அழகாக இருக்கிறீர்கள்…” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“