இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த மகா கும்பமேளா நிகழ்வில் தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
மகா கும்பமேளாவில் புனித நீராட லட்சக் கணக்கான மக்கள் குவிந்து வருவதால், பிரயாக்ராஜ் நகரம் திணறி வருகிறது. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் யாராவது ஒருவர் எல்லோரையும் விர பிரபலமாகி விடுவார் இல்லையா? அப்படி, மகா கும்பமேளா நிகழ்வில், அழகான மயக்கும் கண்கள், ஈர்க்கும் சிரிப்பு, நம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் என பாசி மணி விற்கும் 16 வயது இளம் பெண் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
அவருடைய புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்த்த சிலர், இந்த மகா கும்பமேளா நிகழ்வில் லட்சக் கணக்கானவர்கள் பங்கேற்றாலும் இந்த அழகான இளம் பெண்ணைத் தேடி செல்ஃபி, வீடியோ எடுத்துக்கொண்டனர். யார் இந்த பெண் என்றால், மகா கும்பமேளா நிகழ்வில், கைகளால் செய்யப்படும் பாசி மாலையை விற்பனை செய்பவர், இவர் பெயர் மோனாலிசா போஸ்லே. இவர், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கைகளால் செய்யப்படும் பாசி மாலையை விற்று வருகிறார்.
அழகான மயக்கும் கண்கள்,ஈர்ப்பான சிரிப்பு , நம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் என இயற்கையான அழகால், இந்த மகா கும்பமேளா நிகழ்வின் குயீன் ஆகியிருக்கிறார். மோனாலிசா போஸ்லேவின் புகைப்படங்கள், வீடியோக்களை ‘brown beauty" என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிர்ந்தனர். இதனால், ஒரே நாளில் மோனாலிசா போஸ்லே பிரபலமானார்.
மகா கும்பமேளாவுக்கு நிகழ்வுக்கு செல்பவர்கள், சாமானிய மனிதர்கள் முதல் வசதியான பணக்கார்கர்ள் வரை மோனாலிசா போஸ்லேவைப் பார்த்தால் நிச்சயம் ஒரு செல்ஃபி, ஒரு வீடியோ எடுக்கிறார்கள். செல்ஃபி எடுப்பவர்கள் அவர் விற்கும் பாசிமணி ஒன்றை வாங்கினால்கூட, அவருக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். செல்ஃபியை வைத்து என்ன செய்வது? ஓரு கட்டத்தில் அவர் விற்கும் பாசி மணி, மாலைகளை வாங்க வருபவர்களின் எண்ணிக்கையைவிட, அவருடன் செல்பி மற்றும் வீடியோ
எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மிகப் பெரிய ஆன்மீக நிகழ்வான கும்பமேளாவில் ஒரு இளம்பெண்ணை சுற்றி வந்து அவமரியாதை செய்வதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு வரும் மக்கள் தனது மகளிடம் பாசி மணி மாலைகளைவாங்குவதைவிட செல்ஃபி அதிக அளவில் எடுப்பதாக கூறி, மோனாலிசா போஸ்லேவின் தந்தை, அவரை இந்தூருக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
கும்பமேளாவுக்கு சென்றவர்கள், பேரழகியான மோனாலிசா போஸ்லேவைத் தேடிப்போய் செல்ஃபி, வீடியோ எடுத்ததுகூட தவறில்லை. அப்படியே ஒரு பாசி மணி மாலை வாங்கியிருந்தால் அவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். செல்ஃபி, வீடியோவை வைத்து என்ன செய்வது?