Maharashtra cop gives water to a thirsty monkey: கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் கொடுமையான வெயிலை நாம் தற்போது அனுபவித்து வருகின்ற சூழலில் வனவிலங்குகள் இப்போதே தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்க துவங்கிவிட்டன. மகராஷ்ட்ராவில் உள்ள மல்ஷேஜ் காட் பகுதியில் தாகத்துடன் சுற்றித் திரிந்த குரங்கு ஒன்றுக்கு மனிதாபிமானத்துடன் தண்ணீர் கொடுத்த போக்குவரத்துக் காவலருக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
30 நொடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவில் காவலர் தண்ணீர் தர அதனை குடித்த வண்ணம் தனக்கு பின்னால் நகரும் வாகனங்களையும் அச்சத்துடன் நோட்டம் விடுகிறது அந்த குரங்கு. இந்த வீடியோவை இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil