Advertisment

நெகிழ்ச்சி வீடியோ.. உயிரை காப்பாற்றியவரை கடவுளுக்கு நிகராக நினைத்து காலை தொட்டு நன்றி சொன்ன பெண்!

தங்களது உயிரை பணயம் வைத்து எங்களை காப்பாற்றியதற்கு நன்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
maharashtra flood women viral video

maharashtra flood women viral video

maharashtra flood women viral video : இந்தியாவில் மட்டுமில்லை எந்த தேசத்தை எடுத்துக் கொண்டாலும் நம் உயிரை கடைசி நிமிடத்தில் காப்பாற்றும் நபரை அவ்வளவு எளிதாக மக்களால் மறுந்து விட முடியாது. முதல் உயிர் கொடுப்பவள் தாயாக இருக்கும் பட்சத்தில் அந்த உயிரை நமக்கு காப்பாற்றி கொடுப்பவர் கடவுளுக்கு நிகரானவர் தானே.

Advertisment

சென்னையை பெரு வெள்ளம் தாக்கிய போது, பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட இளைஞர்களை, மீட்பு படையினர், கல்லூரி மாணவர்களை கட்டியணைத்து அழுத குடும்பங்கள் எல்லாம் ஏராளம். கேரளாவிலும் இதை பார்க்க முடிந்தது. அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது மகாராஷ்ட்ராவில் நடந்ததுள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் வந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில், அஸ்ஸாமை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலம் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.எந்த பக்கம் திரும்பினாலும் மக்கள் தண்ணீரில் மிதந்து வருகின்றன. இங்குள்ள சங்கிலி, கோல்ஹாபூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடபட்டதால் ஊருக்குள் நீர் புகுந்து வீடுகள் அழிந்தன.

அப்படி வீடுகளை இழந்து, வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த குடும்பத்தினரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். அப்போது வெள்ளத்தில் இருந்து தங்களை மீட்ட பாதுகாப்பு படையினரின் காலை ஒரு பெண் தொட்டு வணங்கியுள்ளார். தங்களது உயிரை பணயம் வைத்து எங்களை காப்பாற்றியதற்கு நன்றி என கூறியவறாரே அந்த பெண் காலை தொட்டு வணங்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment