/tamil-ie/media/media_files/uploads/2020/06/template-2020-06-02T222136.969.jpg)
mahendra singh dhoni, corona virus, lockdown, ilayaraja, tractor, video, viral, chennai super kings, dhoni, dhoni video, netizens, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
Mahendra singh dhoni : இந்த வீடியோ, 84 ஆயிரத்திற்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் பேர், இந்த பதிவுக்கு லைக் தெரிவித்துள்ளனர். 572 பேர் இந்த வீடியோவை தங்களது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.
mahendra singh dhoni, corona virus, lockdown, ilayaraja, tractor, video, viral, chennai super kings, dhoni, dhoni video, netizens, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
இளையராஜா இசையிலான மெளனராகம் படத்தின் பிஜிஎம்மின் பின்னணியீல், தோனி டிராக்டரை ஓட்டிய வீடியோவை, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தோனி இந்திய அணிக்கு திரும்ப வேண்டி 2020 ஐபிஎல் தொடரில் ஆட ஆர்வமாக இருந்தார். கடந்த மார்ச் துவக்கத்தில் அதற்கான தீவிர பயிற்சியை துவங்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி முகாமில் இணைந்து அதிரடி பேட்டிங் மற்றும் கீப்பிங் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. 2020 ஐபிஎல் தொடரும் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டன. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
தோனி ராஞ்சியில் உள்ள தன் பண்ணை வீட்டில் தன் மனைவி, மகளுடன் தங்கினார். அங்கே அவர் ஷேவ் கூட செய்யாமல் வெள்ளை தாடியுடன் காட்சி அளிக்கும் புகைப்படம் சமீபத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில், மேஸ்ட்ரோ இளையராஜாவின் 77வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வண்ணம், இளையராஜா இசையின் பின்னணியில், மகேந்திர சிங் தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோவை, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோ, 84 ஆயிரத்திற்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் பேர், இந்த பதிவுக்கு லைக் தெரிவித்துள்ளனர். 572 பேர் இந்த வீடியோவை தங்களது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.