கோத்தகிரியில் மேட்டுப்பாளையம் சாலையில் இரவு நேரத்தில் ஒரு மலைப் பாம்பு மெல்ல ஊர்ந்து சாலையைக் கடப்பதைப் பார்த்த வாகன ஓட்டிகள் தங்கள் கார்களை நிறுத்தி, அந்த மலைப் பாம்பு சாலையைக் கடக்கும் வரை காத்திருந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
மலைப் பாம்பு என்பது பொதுவாக காட்டுப் பகுதிகளில் வாழும் ஓர் ஆபத்தான, ஆனால் அழகிய பாம்பினமாகும். இதன் உடல் நீளமாகவும், வலிமையுடனும் காணப்படும். மலைப் பாம்புகள் பெரும்பாலும் மரங்களின் கிளைகளில் அல்லது பாறைகளின் இடைகளில் ஒளிந்து கொண்டு இரையைப் பிடிக்கும். மலைப்பாம்பு விஷம் இல்லாதவைகள் என்றாலும், தங்கள் வலிமையான உடலை பயன்படுத்தி இரையை இறுக்கி கொண்டு விழுங்குகின்றன.
கோத்தகிரியில் மேட்டுப்பாளையம் சாலையில் இரவு நேரத்தில் ஒரு மலைப் பாம்பு மெல்ல ஊர்ந்து சாலையைக் கடப்பதைப்பார்த்த வாகன ஓட்டிகள் தங்கள் கார்களை நிறுத்தி, அந்த மலைப் பாம்பு சாலையைக் கடக்கும் வரை காத்திருந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு “ஒரு பெரிய மலைப் பாம்பு அழகாக சாலையைக் கடக்கும்போது, உலகம் அச்சத்தில் இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், கோத்தகிரியில் மேட்டுப்பாளையம் சாலையில் இரவு நேரத்தில் யாருமில்லாதபோது, ஒரு பெரிய மலைப் பாம்பு திடீரென மெல்ல ஊர்ந்து வந்து சாலையைக் கடக்கிறது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மலைப் பாம்பு கடந்து செல்லும் வரை காத்திருக்கின்றன. மலைப் பாம்பு சாலையைக் கடந்து சென்ற பிறகே கார்கள் புறப்பட்டுச் செல்கின்றன.
இந்த வீடியோ எக்ஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியொவைப் பார்த்த நெட்டிசன்களில் ஒரு எக்ஸ் பயனர், “கார்களை நிறுத்தி சென்றவர்களைப் பாராட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“