viral video: மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரில் ஸ்கூட்டர் ஓட்டும் போது ஆணும் பெண்ணும் குளித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தானே நகர காவல்துறை எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரில் ஸ்கூட்டர் ஓட்டும் போது ஆணும் பெண்ணும் குளிக்கிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மகாராஷ்டிரா மாநிலம், உல்லாஸ்நகரில், 17-வது செக்டாரில் உள்ள போக்குவரத்து சிக்னலில் ஆணும் பெண்ணும் செல்லும் ஸ்கூட்டி நின்றுகொண்டிருக்கும்போது, பின்னாள் வாளியுடன் அமர்ந்திருக்கும் பெண் தண்ணீரை எடுத்து ஸ்கூட்டி ஓட்டும் ஆணின் மீதும் தனதும் மீதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளிக்கிற காட்சி இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து சிக்னலில் ஸ்கூட்டியில் அமர்ந்திருக்கும் ஆணும் பெண்ணும் குளிக்கிற காட்சியைப் பார்த்த அருகே இருந்த அனைவரும் சிரிக்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம், உலாஸ்நகரில் ஸ்கூட்டியில் செல்லும் போது ஆணும் பெண்ணும் தண்ணீர் ஊற்றி குளிக்கிற இந்த வினோதமான சம்பவம், சமூக ஊடகங்களில் வேடிக்கையான உள்ளடக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இருந்தது. ஆனால், இந்த ஜோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய பல நெட்டிசன்களுக்கு அவர்களின் செயல் பிடிக்கவில்லை.
WeDeserveBetterGovt என்ற பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் (@ItsAamAadmi) இந்த வீடியோவை மே 15-ம் தேதி வெளியிட்டார். அதில், உல்ஹாஸ்நகரின் செக்டார்-17-ல் உள்ள ஒரு போக்குவரத்து சிக்னலில் ஆணும் பெண்ணும் ஸ்கூட்டியில் அமர்ந்திருக்கிறார்கள். பின்னால், அமர்ந்திருக்கும் பெண், தன் முன் வைக்கப்பட்டிருந்த வாளியில் இருந்து தன் மீதும் ஸ்கூட்டி ஓட்டும் ஆணின் மீதும் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். பல பயணிகள் இந்த ஜோடியை வேடிக்கையாகப் பார்க்கிறார்கள். அவர்கள் ஸ்கூட்டியில் பயணிக்கும் போது குளித்தவாறே செல்கிறார்கள்.
“மகாராஷ்டிரா போலீஸ் டி.ஜி.பி, தானே சிட்டி போலீஸ் (@DGPMaharashtra @ThaneCityPolice) உல்ஹாஸ்நகரில், பொழுதுபோக்கு என்ற பெயரில் இதுபோன்ற முட்டாள்தனம் அனுமதிக்கப்படுமா? இது பரபரப்பான உல்ஹாஸ்நகர் செக்-17 முக்கிய சிக்னலில் நடந்துள்ளது. மற்றவர்கள் பொதுவில் முட்டாள்தனமான செயல்களைச் செய்வதைத் தவிர்ப்பதற்காக இந்த வீடியோவை நீக்குவது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது” என்று வீடியோவை பதிவிட்ட ட்விட்டர் பயனர் வலியுறுத்தியுள்ளார்.
தானே நகர காவல்துறையின் ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோவிற்கு பதிலளித்து மராத்தியில், “தேவையான நடவடிக்கைக்காக உங்கள் தகவல் தானேயில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த மற்றொரு ட்விட்டர் பயனர், “”இப்படி குளிப்பது சட்டத்தை மீறுவதாக இல்லை, ஆனால் அந்த பெண் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கிறார், குறைந்தபட்சம் அதற்காக நடவடிக்கை எடுக்கலாம்” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
மற்றொரு பயனர், “நிதானமாக இருங்கள் நண்பர்களே, அவர்கள் சமூக ஊடகங்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு ட்விட்டர் பயனர், “எனக்கு நிறைய ஸ்டண்ட்கள் தெரியும், அனைத்தும் தவறு, ஆனால் இது நன்றாக இருக்கிறது. இங்கே என்ன தவறு? படப்பிடிப்புக்காக தெரு முழுவதையும் அடைத்து, சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் உயிரிழப்பை ஏற்படுத்தினால் அது தவறு. பொழுதுபோக்கை நீங்கள் சரி செய்ய வேண்டும். ஒப்பிடுகையில் இது பாதிப்பில்லாததாகத் தெரிகிறது.” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“