வைஃபை இணைப்பால் முறிந்த காதல்; உண்மையை நிரூபித்த பெண் காதலனுடன் சேர மறுப்பு

சீனாவில் வைஃபை இணைப்பால் காதலர்கள் இடையே பிரேக்-அப் ஆன ஒரு விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த விவகாரத்தின் முழு விவரங்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

சீனாவில் வைஃபை இணைப்பால் காதலர்கள் இடையே பிரேக்-அப் ஆன ஒரு விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த விவகாரத்தின் முழு விவரங்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Wifi issue

சீனாவின் சோங்கிங் நகரில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்த ஒரு ஜோடிக்கு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. பொதுவெளியில் நடந்த வாக்குவாதம் ஒரு தொலைக்காட்சி விசாரணையே நடத்தும் அளவுக்கு விபரீதமானது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, பெயர் வெளியிடப்படாத ஒரு நபர், தனது காதலியின் தொலைபேசி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் வைஃபை உடன் தானாக கனெக்ட் ஆனதால், அப்பெண் வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்து உறவை முறித்துக் கொண்டார்.

Advertisment

 

 

Advertisment
Advertisements

அந்தப் பெண் அளித்த விளக்கத்தின்படி, விடுமுறையின் போது அவர்கள் ஒரு ஹோட்டலில் அறை எடுக்க முயன்றனர். தனது அடையாள அட்டையை கண்டுபிடிக்க முடியாததால், அவர் டிஜிட்டல் நகலைப் பதிவிறக்கம் செய்ய முயன்றார். அப்போதுதான் அவரது தொலைபேசி தானாகவே ஹோட்டலின் வைஃபை நெட்வொர்க்குடன் கனெக்ட் ஆனதை இருவரும் கவனித்தனர். உடனே அந்த நபர் சந்தேகம் அடைந்து, முன்பு எப்போதாவது இங்கு தங்கியிருந்தாயா என்று அப்பெண்ணிடம் கேள்வி எழுப்பியுள்ளார். கேட்டார்.

அந்தப் பெண் தான் இதற்கு முன்பு அந்த ஹோட்டலுக்கு வந்ததே இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், வைஃபை இணைப்புக்கான காரணத்தை அவரால் விளக்க முடியவில்லை. அப்பெண்ணுக்கு பதற்றம் அதிகரிக்கவே, அந்த நபர் திடீரென உறவை முறித்துக் கொண்டார். "அவள் உண்மையற்றவளாக இருந்தாள்" என்று அவர் உறுதியாக நம்பினார். அதிர்ச்சியிலும், துக்கத்திலும் உறைந்த அந்தப் பெண் தனது நண்பர்களிடம் விஷயத்தைக் கூறினார். அவர்களும் இந்த வினோதமான காரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விவகாரத்தில் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் முயற்சியில் அப்பெண் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, தான் முன்பு வேலை செய்த சோங்கிங்கில் உள்ள மற்றொரு ஹோட்டலும், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலும் ஒரே வைஃபை பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதை அவர் கண்டுபிடித்தார். அவரது தொலைபேசி முன்பு சேமித்திருந்த உள்நுழைவு விவரங்களால் தானாகவே கனெக்ட் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அப்பெண், இதை தனது முன்னாள் காதலனிடம் விளக்க முயன்றார். ஆனால், அந்த நபர் பதிலளிக்க மறுத்து, அப்பெண்ணை பிளாக் செய்ததாக தெரிகிறது.

தான் நிரபராதி என்பதை நிரூபிக்க இறுதி முயற்சியாக, அந்தப் பெண் உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றை அணுகினார். அங்கிருந்து ஒரு செய்தியாளர் அப்பெண்ணின் முன்னாள் பணி இடத்திற்குச் சென்று வரவேற்பறையில் இருந்த வைஃபை உடன் கனெக்ட் செய்தார். பின்னர், சம்பவம் நடந்த ஹோட்டலுக்கு அவர்கள் சென்றனர். அங்கு செய்தியாளரின் தொலைபேசியும் தானாகவே வைஃபை உடன் கனெக்ட் ஆனது.

இந்த சோதனை அந்தப் பெண் நிரபராதி என்பதை உறுதிப்படுத்தியது. இருப்பினும், அவர் தனது முன்னாள் காதலனுடன் மீண்டும் சேர எந்த எண்ணமும் இல்லை என்று அந்த சேனலிடம் கூறினார்.

"முக்கியமான நேரத்தில் அவர் என்னை நம்பவில்லை" என்று ஹாங்காங் செய்தித்தாள் அந்தப் பெண்ணின் கருத்தை மேற்கோள் காட்டியது. "உண்மைகளை ஆராயாமல் அவசர முடிவுக்கு வரும் ஒருவருடன் நான் மீண்டும் செல்ல மாட்டேன்" என்று அந்தப் பெண் தெரிவித்தார்.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: