ரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்!

கடைக்கோடியில் இருந்தப்படி அவரை ரசித்து வருகின்றனர்.

கடைக்கோடியில் இருந்தப்படி அவரை ரசித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AR Rahman twitter

AR Rahman twitter

AR Rahman twitter : இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தனது ரசிகருக்காக பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் அனைவராலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தன்னை நேசிக்கும் ரசிகனை, மதிக்கும் கலைஞரான ஏ.ஆர் ரகுமானுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisment

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமானுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவரின் இசைக்கு மட்டும் உண்டான ரசிகர்கள் கூட்டம் இல்லை. அவரின் பண்பு, நல்லொழுக்கம், தமிழ் மீது அவருக்கு இருக்கும் மரியாதை இவை அனைத்தையும் கண்டு வியந்த ரசிகர்கள் கடைக்கோடியில் இருந்தப்படி அவரை ரசித்து வருகின்றனர்.

அப்படி ஏ.ஆர் ரகுமானின் அதிதீவிர ரசிகனாக இருப்பவர் சந்தர். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ஒரே பிரபலம் ஏ.ஆர் ரகுமான் மட்டும்தான். அதுமட்டுமில்லை அவர் தனது சோஷியல் மீடியா பக்கங்களிலும் எப்போதுமே ஏ.ஆர் ரகுமான் குறித்த தகவல்கள், செய்திகள், பாடல்களை தான் பகிர்ந்து வருவார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், சந்தர் சமீபத்தில் வாங்கிய BMW காரின் நம்பர் பிளேட்டில் I Love ARR என பொறித்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். தனது கனவு காரான BMW வை வாங்கிய அதில் ஏ.ஆர் ரகுமான் பெயரை பதிவிட்டது மிகுந்த சந்தோஷம் என சந்தர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவை பார்த்த ஏ.ஆர் ரகுமான் அதற்கு கொடுத்த பதில் சந்தரை மட்டுமில்லை ஓட்டுமொத்த ரகுமான் ரசிகர்களையும் கணகலங்க வைத்துள்ளது. சுந்தரின் அந்த பதிவுக்கு ரகுமான் கொடுத்த பதில் இதுதான் “ ஜாக்கிரதையாக வண்டி ஓட்டு”.

ரசிகனை ரசிக்கும், மதிக்கும் கலைஞர்களை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள்.

Social Media Viral A R Rahman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: