New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/maradona-portraits-drugs.jpg)
அவர் கொண்டு வந்திருந்த உடமைகள் பின்னர் டோமோகிராஃபிக் எக்ஸ்ரே ஸ்கேனிங் கருவி மூலம் சோதனையிடப்பட்டது.
Man conceals 2kg cocaine inside Maradona paintings, caught at Turkey airport : கடந்த நவம்பர் 25ம் தேதி அன்று மறைந்த கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனாவின் ஓவியங்கள் மற்றும் கரிகேச்சர்களில் மறைக்கப்பட்டு 2.6 கிலோ கொகைன் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது.
துருக்கி சுங்க அதிகாரிகளால் நடத்தபப்ட்ட சோதனையில், இஸ்தான்புல் விமானநிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற நபரிடம் இருந்து பெறப்பட்ட மரோடனாவின் ஓவியங்களுக்கு பின்புறம் இந்த போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்து கண்டுபிடிக்கப்பட்டது.
NO COMMENT | İstanbul Havalimanı'nda, Maradona tablolarının arkasına gizlenmiş 2,65 kilogram kokain ele geçirildi
— euronews Türkçe (@euronews_tr) December 23, 2020
சுங்க அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் எவ்வாறு அந்த போதைப் பொருள் ஓவியத்தின் பின்புறத்தில் வைக்கப்பட்டடிருக்கும் மரச்சட்டத்தில் எப்படி மறைக்கப்பட்டிருந்தது என்பது பதிவாகியுள்ளது.
ஆரம்பத்தில் அந்த பயணி பார்ப்பதற்கு உண்மையிலேயே மிகப்பெரிய மரடோனாவின் ரசிகர் போலவே தெரிந்தார். ஆனால் அவர் கொண்டு வந்திருந்த உடமைகள் பின்னர் டோமோகிராஃபிக் எக்ஸ்ரே ஸ்கேனிங் கருவி மூலம் சோதனையிடப்பட்டது. அப்போது அந்த புகைப்படங்களுக்கு பின்னால் அசாதாரணமான வகையில் அடர்த்தியுடன் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு 2,61,000 அமெரிக்க டாலர்களாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட நபர் விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.