இளைஞர் ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு சென்று சாதூர்யமாக பனைமர ஓலைகளை மெஷின் மூலம் வெட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு கட்டத்தில், பனைமர உச்சியில் இருந்து விழுந்து விடுவாரோ என்ற எண்ணம் பார்ப்போரிடம் எற்படுகிறது.
எண்ணற்ற மக்கள் இந்த வீடியோவைப் பார்த்து, தங்களது கருத்துக்களை பகிரிந்து வருகின்றனர்.
இந்த வீடியோவை, வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா அவர்களும் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் பயனர்களின் பதில்கள்:
இந்தியாவில் பாரம்பரிய தொழிலாக பனை சம்பந்தப்பட்ட தொழில்களை புனரமைத்து அதன் மூலம் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.