man dog monkeys bathing video viral, man monkeys bathing, viral video, மனிதன் நாய் குரங்குகள் குளியல் வீடியோ, வைரல் வீடியோ, சமத்துவ குளியல் வீடியோ, tamil video news, latest tamil video news, latest viral video news, trending video news
மனிதன், நாய், குரங்குகள் சந்தோஷமாக ஒன்றாக குளிக்கிற, இனம், மொழி கடந்த ஒரு சமத்துவக் குளியல் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Advertisment
‘நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’ என்று கவிஞர் மருதகாசி இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பழைய சினிமா பாடல் புகழ்பெற்றது. இதில் சமரசம் உலாவும் இடம் என்று சுடுகாட்டை குறிப்பிட்டிருப்பார். உண்மையில் சுடுகாட்டில் கூட சமரசம் இல்லைதான்.
ஆனால், உலகில் எங்கேனும் தற்காலிகமாகவேனும் இனம், மொழி எல்லாவற்றையும் கடந்து அன்பும் சமரசமும் நிலவத்தான் செய்கிறது. அப்படியான நிகழ்வுகள் எவ்வுயிரையும் தம்முயிர் போல நேசிக்கும் அன்புடையார்களால் மட்டுமே சாத்தியமாகிறது.
Advertisment
Advertisements
அப்படி வெளிநாட்டுக்காரர் ஒருவர் மூன்று டப்களை வைத்து அதில் இரண்டு டப்களில் இரண்டு குரங்குகளை நிற்க வைத்துள்ளார். தான் இருக்கும் டப்பில் ஒரு நாயை தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டு குளிப்பாட்டுகிறார். அவருடன் அந்த குரங்குகளும் சேர்ந்துகொண்டு நாயை தேய்த்து குளிப்பாட்டுகின்றன. பின்னர், அந்த அன்பான வெளிநாட்டு நபரும் இரண்டு குரங்குகளும் ஒருவருக்கு ஒருவர் தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளிக்கின்றனர். உண்மையில் இது இனம், மொழி கடந்த ஒரு சமத்துவக் குளியல்தான்.
நாய், குரங்குகள், மனிதர் என இனம், மொழி கடந்த இந்த சமத்துவக் குளியல் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். பார்ப்பவர்களை உற்சாகமடையச் செய்யும் இந்த வீடியோ நெட்டிசன்களை ஈர்த்துவருவதால் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"