இன்னைக்கு இண்டெர்நெட்ல ட்ரெண்டான ஒரு விஷயம் என்னன்னா ஒரே ஒரு வார்த்தை தான். கிட்னி…. காதலுக்கு கண் இல்லை அப்டின்றாதல் இதயத்தை தர்றோம் அப்டின்ற பேர்ல நடக்குற ட்ராமாக்களுக்கு மத்தில ஒருத்தர் தன்னுடைய கிட்னியவே கொடுத்துருக்காரு… ஆனா அது அவரோட காதலிக்கு இல்ல. காதலியோட அம்மாவுக்கு. நீங்க கூட அடடே என்ன இவ்ளோ நல்ல மனுஷங்க எல்லாரும் நம்ம கூடதான் வாழ்றாங்களான்னு யோசிக்க ஆரம்பிப்பீங்க. ஆனா அங்க தான் ஒரு ட்விஸ்ட்டு.
கிட்னிய தானமா வாங்கிக்கிட்ட காதலியோ ஒரே மாதத்தில் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டு காதலருக்கு தண்ணீ காட்டிவிட்டார். திருமணம் என்பது தனிப்பட்ட முடிவுக்கு கீழ் தான் வரும் என்றாலும் கூட இது ஒரு வித புதுமையான செய்தியாக, கேள்விப்படாத செய்தியாக இருக்கிறது. நாங்க கேட்டத உங்களுக்கும் தெரிவிக்க தான் இந்த செய்தி.
இந்த விசயம் மெக்சிகோவில் நடைபெற்றுள்ளது. பாஜா கலிஃபோர்னியாவில் வசித்து வரும் ஆசிரியர் உஜேயேல் மார்டினெஸ் என்பவர் தன்னுடைய காதலியின் தாயாருக்கு தன்னுடைய கிட்னியை தானமாக வழங்கியுள்ளார். அவருடைய தன்னலமற்ற செயலை பாராட்டுவதற்கு பதிலாக காதலியோ ஒரே மாதத்தில் அவரை பிரேக்- அப் செய்த கையோடு வேறொருவரை திருமணமும் செய்து கொண்டார்.
அவர் இது தொடர்பாக தொடர்ந்து பதிவு செய்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில தேசிய தொலைக்காட்சி நிறுவனங்கள் கூட இந்த விவகாரத்தை செய்தியாக்கி வெளியிட்டது. முன்னேறிச் செல்லுங்கள். உங்களுக்கான பெண் உங்களுக்கு நிச்சயம் கிடைப்பார் என்று கூறி மார்டினெஸுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
கிட்னியை தானமாக கொடுத்தார் என்பதற்காக அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும், அல்லது அந்த உறவில் அவர் வாழ வேண்டிய அவசியமும் அப்பெண்ணிற்கு இல்லை என்றும் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil