உங்கள் அண்டைவீட்டு நண்பர் ஸ்பைடர் மேன் தெருக்களைப் பாதுகாப்பதைத் தாண்டி சென்றுவிட்டார். இந்தியாவில், பிரபலமான மார்வெல் சூப்பர் ஹீரோ விளையாட்டுத்தனமான செயல்களுக்கு உட்பட்டுள்ளார். ஸ்பைடர் மேன் உடையில் ஒருவர், ஓடும் காரின் பானட்டில் போஸ் கொடுப்பதில் இருந்து மொட்டை மாடியில் ஸ்பைடர் மேன் வேடமிட்டு ரொட்டி செய்வது வரை, இந்த இலகுவான செயல்கள் அன்பான கதாபாத்திரத்திற்கு நகைச்சுவையான திருப்பத்தை சேர்த்துள்ளன.
சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, மும்பையில் உள்ள கல்யாண் ஜங்ஷனில் எதிர்பாராத காட்சியைப் பதிவு செய்துள்ளது. அங்கே ஒரு சோசியல் மீடியா இன்ஃபுளுயன்ஸர் ஸ்பைடர் மேன் உடையணிந்து, வைரல் கண்டெண்ட்டை உருவாக்க பிச்சைக்காரராக போஸ் கொடுத்தார். இந்த வீடியோ மும்பையில் இருந்து இன்ஸ்டாகிராம் பயனர் ஸ்பைடர்மேன் (@shaddyman98) பகிர்ந்துள்ளார், அவர் “யாராவது, ஸ்பைடர் மேனுக்கு பிச்சை போடுங்க” என்று தலைப்பிட்டுள்ளார்.
கிளாசிக் சிவப்பு மற்றும் நீல நிற உடையில் ஒரு மனிதன், பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், ரயில் நிலையத்தில் ஒரு படிக்கட்டுக்கு அடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். பரபரப்பான ரயில்வே அமைப்பிற்கு மத்தியில், கண்டெண்ட்டை உருவாக்கியவரும் பணம் கேட்டு கையை நீட்டினார்.
இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ ஏற்கனவே 3 மில்லியன் (30 லட்சம்) பார்வைகளையும் 1.4 லட்சம் லைக்குகளையும் குவித்துள்ளது. ஏராளமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த விடீயோவை ரசித்தாலும், சிலர் இந்த வகையான காட்சியை பொது இடத்தில் நடத்துவது குறித்து நெறிமுறைக் கவலைகளை எழுப்பினர். இன்ஃபுளுயன்ஸர் நடிப்பு நகைச்சுவையாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் பலர் கண்டறிந்தாலும், ஆன்லைன் புகழுக்காக இன்ஃபுளுயன்ஸர்களின் எல்லை பற்றிய விவாதத்தையும் இது தூண்டியது.
ஒரு பயனர் இந்த வீடியோ குறித்து, “மார்வெல் பெயரில் கொடுங்கள்” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர் எழுதினார், “சகோ கண்டெண்ட்டுக்காக தன்னை தியாகம் செய்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது பயனர், “மார்வெல் ஸ்டுடியோ இதைப் பார்ப்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“