New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/21/disability-2025-06-21-11-41-37.jpg)
'யாரு சாமி அவன்...?' ரயிலில் பயணிக்க மாற்றுத் திறனாளிபோல் நடித்த இளைஞர்- வைரலாகும் வீடியோ!
ரயிலில் இலவசப் பயணம் மேற்கொள்வதற்காக இளைஞர் ஒருவர் மாற்றுத் திறனாளி போல் நடித்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
'யாரு சாமி அவன்...?' ரயிலில் பயணிக்க மாற்றுத் திறனாளிபோல் நடித்த இளைஞர்- வைரலாகும் வீடியோ!
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாச வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ரயிலில் இலவசப் பயணம் மேற்கொள்வதற்காக இளைஞர் ஒருவர் மாற்றுத்திறனாளி போல் நடித்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்த நபரின் செயலுக்கு இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் விரைவாகவும், குறைந்த கட்டணத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்திய அரசு நாடு முழுவதும் ரயில் சேவையை வழங்கி வருகிறது. வெளியூர், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நபர்கள் பயணிக்கும் வகையில் விரைவு ரயில்களும், உள்ளூரில் பயணிக்க உள்ளூர் ரயில்களையும் இயக்கி வருகிறது. இதுதவிர பயண சலுகைகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக, ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத் திறனாளிக்கு 75% வரை கட்டண சலுகை வழங்குகிறது. இதுதவிர அவர்களுக்கு எனத் தனி இருக்கைகளுடன் பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்படி மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக அரசு பல சலுகைகளை வழங்கிவரும் நிலையில், அதனை தவறாக பயன்படுத்தி இளைஞர் ஒருவர் ரயிலில் பயணித்துள்ளார். வைரலாகி வரும் வீடியோவில், ரயிலில் இருந்து மாற்றுத்திறனாளி போல இளைஞர் ஒருவர் கீழே இறங்குகிறார். கால்களை மடக்கிக்கொண்டு பார்ப்பதற்கு அப்பாவி போல இறங்கி வரும் இளைஞர், சுற்றி பார்த்துவிட்டு யாரும் இல்லை எனத் தெரிந்தவுடன் ஒரு சில நொடிகளிலேயே சாதாரணமாக நடக்க தொடங்குகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
A man pretended to be disabled to dodge a train fare, deceiving both passengers and staff—until he was caught walking away normally after disembarking.
— Mid Day (@mid_day) June 17, 2025
VC: X#viralvideo #railways #fakedisability #train pic.twitter.com/UwCxRuqlYa
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.