Advertisment

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை; பயணியிடம் மன்னிப்பு கேட்ட ஐ.ஆர்.சி.டி.சி

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை இருப்பதாக பயணி புகார்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியுடன் மன்னிப்பு கேட்ட ஐ.ஆர்.சி.டி.சி

author-image
WebDesk
New Update
irctc yogurt fungus

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை இருக்கும் புகைப்படம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி ஆனந்த் விஹாருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் பயணித்த ஒருவர், தனக்கு சாப்பாட்டுடன் கெட்டுப்போன தயிர் பரிமாறப்பட்டதாகக் கூறியுள்ளார். அந்த நபர் X பக்கத்தில் தனக்கு வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Man finds fungus in yoghurt served to him on Vande Bharat Express, IRCTC responds

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயில்வே அமைச்சகம் மற்றும் வடக்கு ரயில்வே ஆகியவற்றை டேக் செய்து, அந்த நபர், “இன்று எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் டேராடூனில் இருந்து ஆனந்த் விஹார் வரை வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்கிறேன். எனக்கு பரிமாறப்பட்ட அமுல் தயிரில் பச்சை நிற அடுக்கு இருந்தது, அது பெரும்பாலும் பூஞ்சையாக இருக்கலாம். வந்தே பாரத் ரயிலில் இருந்து இதுபோன்ற சேவையை எதிர்பார்க்கவில்லைஎன்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனின் (IRCTC) அதிகாரப்பூர்வ பக்கத்தை வடக்கு ரயில்வே டேக் செய்து, "இந்த விஷயத்தைப் பார்க்க" உத்தரவிட்டது.

இந்த பதிவுக்கு பதிலளித்த IRCTC, பயணியிடம் மன்னிப்பு கேட்டது. சார், ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் மனப்பூர்வமான மன்னிப்பு. இந்த விவகாரத்தில் உடனடியாக மேற்பார்வையாளர் தலையிட்டு, தயிரை உடனடியாக மாற்றினார். மேலும், தயிர் பேக் காலாவதி தேதிக்குள் இருந்தது. உற்பத்தியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்று IRCTC பதிவிட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் அதற்கு பதிலடி கொடுத்தனர். "அது பூஞ்சை, பெரும்பாலும் அஸ்பெர்கிலஸ் அல்லது கிளாடோஸ்போரியம் எஸ்.பி. பச்சை நிறத்தை அடிப்படையாகக் கொண்டது,” என்று ஒரு பயனர் கூறினார். மற்றொரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் இருந்து உணவு தொடர்பாக பல புகார்கள் வருகின்றன. ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் ரயில்வேயின் நம்பகத்தன்மையை கெடுக்கும்,” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், ராணி கம்லாபதியில் இருந்து ஜபல்பூர் சந்திப்புக்கு பயணித்த பயணி ஒருவர் அவருக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சியை இருப்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment