New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/What-an-experience-King-style.jpg)
360 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் தனி ஒரு நபராக பயணித்திருக்கிறார்.
Man flies solo on 360-seater flight from Mumbai to Dubai after buying ticket for Rs 18000 : 40 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் பவேஷ் ஜவேரிக்காக விமானம் ஒன்று இயக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ரூ. 18 ஆயிரம் கொடுத்து துபாய்க்கு விமான முன்பதிவு செய்த ஒரு நபருக்காக மே 19ம் தேதி அன்று விமானம் இயக்கப்பட்டுள்ளது.
360 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் தனி ஒரு நபராக பயணித்திருக்கிறார். தன்னுடைய வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், “நான் பொதுவாக வீடியோக்கள் எல்லாம் எடுக்க மாட்டேன். ஆனால் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக உணருகின்றேன் ஏன் என்றால் இன்று எமிரேட்ஸ் விமானத்தில் மும்பையில் இருந்து துபாய்க்கு செல்லும் ஒரே பயணி நான் தான் என்று கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட மும்பை விமான நிலையமே துடைத்து வைக்கப்பட்டது போல் இருந்த நிலையில் ஜவேரியை எமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் அவரை அழைத்து சென்றனர். அவர் ஒருவருக்காக அந்த விமானத்தில் பணிப்பெண்கள் உள்ளிட்டோர் காத்திருந்தனர் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்வையிட்ட பலரும் இவர் மிகவும் அதிர்ஷ்டசாலி தான் என்று ட்வீட்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.