New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/01/selfie.png)
ஐதராபாத்தில் அலட்சியமாக ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுத்த இளைஞரின் மீது ரயில் மோதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்தில் அலட்சியமாக ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுத்த இளைஞரின் மீது ரயில் மோதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக செல்ஃபி மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஆபத்தான இடங்களில் உயிரையும் மதிக்காமல் செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள் தங்கள் உயிரையே இழக்கும் நிலைமைக்கு ஆளாகின்றனர்.
ஐதராபாத்தில் பாரத் நகர் ரயில் நிலையம் அருகே, ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுக்கும் இளைஞர் மீது ரயில் மோதும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில், இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலின் முன்பு செல்ஃபி எடுப்பதற்காக, தண்டவாளத்தின் முனையிலேயே நிற்கிறார். அப்போது, ரயில் வருவதை அருகிலிருந்த ஒருவர் எச்சரித்தும், அதனை கவனிக்காமல் செல்ஃபி எடுப்பதிலேயே கவனமாக இருக்கிறார் அந்த இளைஞர்.
இதையடுத்து, வேகமாக வந்த ரயில் அந்த இளைஞரின் மீது மோதியது. இதனால், படுகாயமடைந்த இளைஞர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞர் பாரத் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.