New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/snake-drink-water.jpg)
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்கிற இதே நாட்டில்தான் பெண்கள் பாம்புக்கு பால் வார்க்கிறார்கள். அந்த வரிசையில் இந்த இளைஞர் தாகத்தில் தவிக்கும் பாம்புக்கு தண்ணீர் வார்க்கும் வீடியோவைப் பாருங்கள்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால், அதே பாம்பு தாகத்தில் தவிக்கும்போது இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து பாம்புக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு நாளும் பல விலங்குகள் வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று இளைஞர் ஒருவர் பாம்புக்கு தண்ணீர் வார்க்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
இந்தியாவில் பாம்பை தெய்வமாக வணங்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் பாம்புக்கு பால் வைப்பதை பலரும் பார்த்திருப்பீர்கள். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். வாழை மரங்கள் நிறைந்த பகுதியில் நஞ்சுகொண்ட பாம்பு ஒன்று தாகத்துடன் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த இளைஞர் ஒருவர் அருகே சென்று வாட்டர் கேனில் உள்ள தண்ணீரை அந்த பாம்புக்கு குடிக்க கொடுக்கிறார். அந்த பாம்புவும் அந்த இளைஞர் ஊற்றும் தண்ணீரை வாட்டர் கேனில் இருந்து அப்படியே குடிக்கிறது.
Love & water...
Two best ingredients of life pic.twitter.com/dy3qB40m6N
— Susanta Nanda IFS (@susantananda3) February 16, 2021
இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து அன்புடன் பாம்புக்கு தண்ணீர் வார்க்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து சுசந்தா நந்தா ஐஎஃப்எஸ் குறிப்பிடுகையில், அன்பும் தண்ணீரும் வாழ்க்கைக்கு தேவையான இரண்டு சிறந்த விஷயங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்கிற இதே நாட்டில்தான் பெண்கள் பாம்புக்கு பால் வார்க்கிறார்கள். அந்த வரிசையில் இந்த இளைஞர் தாகத்தில் தவிக்கும் பாம்புக்கு தண்ணீர் வார்ப்பதையும் பாருங்கள். இளைஞர் பாம்புக்கு தண்ணீர் தருவதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.