கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெவ்வேறு வகையான முகக்கவசங்கள் பிரபலாமாகி வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டில் ஒருவர் பாம்பைக் கொண்டு வாய் மற்றும் மூக்கை மூடியுள்ளார்.
Advertisment
மூச்சுக் குழாய், மற்றும் வாயின் வழியே இந்த வைரஸ் நுழைவதால், கொரோனா பெருந்தொற்றை பரவல் தடுப்பு நடவடிக்கையில் முகக்கவசம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
வைரஸை நமது வாய், மூக்கு, கண்களுக்கு எடுத்து செல்வதில் நமது கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அடிக்கடி கைகளை 20 நொடிகள் சோப்பு போட்டு கழுவுவது இந்த தொற்றைத் தடுக்க உதவும்.
சால்ஃபோர்டில் நகரில் உள்ள பொது போக்குவரத்தில் பயணம் செய்த அவர், நாட்டின் கோவிட் -19 கட்டுப்பாடு யுக்திகளை கேலி செய்யும் முயற்சியாக அவர் இந்த செயலில் ஈடுபட்டதாக டெய்லி மெயில் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இங்கிலாந்து நாட்டில், பொது பேருந்தில் பயணிக்கும் பொது முகக்கவசியம் அணிவது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil