தாய்லாந்தில் ஐஸ்கிரீமூக்குள் உறைந்த பாம்பைப் பார்த்து அதிர்ச்சி: இணையத்தை திகைக்க வைத்த போஸ்ட்

இந்தச் சம்பவம் தாய்லாந்தில் பாக் தோ, முவாங் ரட்சபுரியில் நடந்தது. ஐஸ்கிரீமுக்குள் உறைந்த பாம்பின் புகைப்படங்களை ஒருவர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டார்.

author-image
WebDesk
New Update
snake ice- cream thailand

ஐஸ்கிரீமுக்குள் உறைந்த பாம்பின் புகைப்படங்களை ஒருவர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டார்

தாய்லாந்தில் ஒருவர் தான் வாங்கிய ஐஸ்கிரீம் பாருக்குள் கற்பனை செய்ய முடியாத ஒன்றைக் கண்டுபிடித்ததும் திகிலடைந்தார் -  அது ஒரு முழு பாம்பு, ஐஸ்கிரீமுக்க்ளு உறைந்துபோயிருந்தது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் விரைவில் வைரலாகி சமூக ஊடக பயனர்களை நம்ப முடியாமல் செய்தது.

Advertisment

முவாங் ரட்சபுரியில் உள்ள பாக் தோவைச் சேர்ந்த ரேபன் நக்லெங்பூன் என்பவர், தெருவில் விற்பனை செய்பவரிடமிருந்து ஐஸ்கிரீமை வாங்கியிருந்தார். ஆனால், அவர் அதை பிடித்தபோது, ​​உறைந்த ஐஸ்கிரீமில் இருந்து கருப்பு மற்றும் மஞ்சள் நிற பாம்பின் தலை வெளியே எட்டிப் பார்ப்பதைக் கண்டார்.

தனது கண்டதை பகிர்ந்து கொள்ள உடன் பேஸ்புக் பக்கத்திற்குச் சென்ற அவர், தாய் மொழியில் ஒரு தலைப்புடன் வினோதமாக ஐஸ்கிரீமில் கண்ட புகைப்படங்களை வெளியிட்டார்: "எவ்வளவு பெரிய கண்கள்! அது இன்னும் இறந்துவிட்டதா? கருப்பு பீன்ஸ், தெரு விற்பனையாளர், உண்மையான படம், ஏனென்றால் நானே அதை வாங்கினேன்.” "கருப்பு பீன்ஸ்" பற்றிய குறிப்பு தாய்லாந்தில் பிரபலமான ஒரு வகை ஐஸ்கிரீமைப் பற்றியது.

இந்த பதிவைப் பாருங்கள்: 

Advertisment
Advertisements

(20+) น้องถั่วดำเสียชีวิตแล้วนะครับ... - เรย์แบน นักเลงบุญ ปากท่อ เมืองราชรี | Facebook

ஆச்சரியப்படும் வகையில், அவரது பதிவு வைரலானது, ஆயிரக்கணக்கான எதிர்வினைகள், பகிர்வுகள் மற்றும் கருத்துகளைப் பெற்றது. சில பயனர்கள் திகிலடைந்தனர், மற்றவர்கள் நகைச்சுவைகளைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவர், “அதை இன்னும் சாப்பிடாதீர்கள். அது உருகும் வரை காத்திருங்கள், அதனால், அது மீண்டும் உயிர்பெறக்கூடும்” என்று நகைச்சுவையாக் கிண்டல் செய்தார். மற்றொருவர்,  “நான் ஒரு முறை முயற்சி செய்யச் சொன்னால், என் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்படுமா? என்று கேலி செய்தார்.

ஐஸ்கிரீமில் தொந்தரவான ஒன்று இருப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, மும்பையில் ஒரு மருத்துவர் தனது சகோதரி ஆன்லைனில் ஆர்டர் செய்த பட்டர்ஸ்காட்ச் கோனை கடித்தபோது வயிற்றைக் கசக்கும் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தார். ஐஸ்கிரீமில் உள்ளே துண்டிக்கப்பட்ட மனித விரல் இருப்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: