/indian-express-tamil/media/media_files/2025/08/19/man-lifts-bike-railway-track-2025-08-19-17-35-53.jpg)
இந்த சம்பவம் நடந்த இடம் மற்றும் தேதி சரியாகத் தெரியவில்லை. Photograph: (Image source: @jist.news/Instagram)
ரயில்வே கேட் மூடப்பட்டதால் காத்திருக்காமல், ஒரு நபர் 112 கிலோ எடையுள்ள பைக்கை தோளில் சுமந்துகொண்டு தண்டவாளத்தை கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஜிஸ்ட் நியூஸ் (@jist.news) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்த நபர் தன் பைக்கை மிக எளிதாக தூக்கி தண்டவாளத்தை கடந்து செல்வது பதிவாகியுள்ளது. இதைக் கண்ட அங்கிருந்த மற்றவர்கள் ஆச்சரியத்துடன் அவரைப் பார்க்கிறார்கள்.
"மூடப்பட்ட ரயில்வே கேட்டில் காத்திருக்காமல், 112 கிலோ எடையுள்ள தனது பைக்கை தோளில் தூக்கிக்கொண்டு தண்டவாளத்தை கடந்து சென்ற நபரால் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. மற்றவர்கள் காத்திருக்கும்போது, அவர் மட்டும் பைக்கோடு நடந்து செல்வதை இந்த வீடியோ காட்டுகிறது. சிலர் அவரை 'பாகுபலி' என்று அழைத்தனர். அதே சமயம், சிலர் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், விதிகளை மீறியதற்காகவும் விமர்சித்தனர்" என்று இந்த வீடியோவின் தலைப்பு கூறுகிறது.
இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், ஒருபுறம் இதை வேடிக்கையாக பார்க்க, மறுபுறம் பொது பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது. “இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அவ்வளவு அவசரம், தனது மேசையில் இருக்கும் கோப்புகளில் கையெழுத்திட கூட அவருக்கு நேரம் இல்லை” என்று ஒரு பயனர் கிண்டல் செய்துள்ளார். “ஆண்களின் வாழ்க்கை பரிதாபமானது. குடிக்க போகும் பார்ட்டிக்காக தாமதமாகிறதா அல்லது நிதி இலக்கை அடைய தாமதமாகிறதா என்று தெரியவில்லை” என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
“இந்த நாகரீகமற்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்” என்று மூன்றாவது பயனர் கோபத்தை வெளிப்படுத்தினார். “இன்று நாம் இப்படிப்பட்ட மக்களாக மாறிவிட்டதை நினைத்து பெருமை கொள்கிறேன்... பொறுப்புணர்ச்சி என்பதே இல்லை... நாளுக்கு நாள் பின்னோக்கி செல்கிறோம்” என்று நான்காவது பயனர் தனது ஏமாற்றத்தை தெரிவித்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இதேபோன்று ஒரு நபர், ரயில்வே கேட் திறக்க காத்திருக்காமல், தனது பைக்கை தோளில் தூக்கி தண்டவாளத்தை கடந்து சென்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.