Advertisment

இறந்த எலி, விஷ பாம்பு: ஸ்விக்கியில் லைம் சோடா ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு வந்த எம்ப்டி கிளாஸ்

ஒரு யூஸர், அடுத்த ஆர்டரில் உங்களுக்கு ஒரு பக்கெட் லைம் சோடாவை அனுப்புவார்கள், என்று கலாய்த்தார். வெப்பத்தின் காரணமாக லைம் சோடா ஆவியாகிவிட்டது)" என்று இன்னொரு யூஸர் கமென்ட் செய்தார்.

author-image
WebDesk
New Update
swiggy delivery

Man orders lime soda from Swiggy, receives ‘sealed’ empty glass. Pic goes viral

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரு அசாதாரண சம்பவத்தில், லைம் சோடாவை ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ஸ்விக்கி சீல் வைத்த எம்ப்டி கிளாஸ் வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

வாடிக்கையாளர் ஆரன்ஷ் X பக்கத்தில் பகிர்ந்த கிண்டலான படம் இப்போது கிட்டத்தட்ட 200k பார்வைகளைப் பெற்றுள்ளது.

நன்றி, ஸ்விக்கி, சீல் வைக்கப்பட்ட எம்ப்டி கிளாஸ் எனக்கு அனுப்பியதற்கு. எனது லைம் சோடா மற்றொரு ஆர்டரில் வரும் என்று நம்புகிறேன்.”

இந்த போஸ்ட் வைரலான பிறகு, ஸ்விக்கி இந்த விஷயத்தைப் பார்ப்பதாக உறுதியளித்தது.

ஹாய் ஆரன்ஷ்! இது விசித்திரமாகத் தெரிகிறது, உங்கள் ஆர்டர் ஐடியுடன் எங்களுக்கு உதவ முடியுமா? இதை நாங்கள் கவனிப்போம், என்றது.

இதற்கு பதிலளித்த ஆரன்ஷ், “நன்றி, இப்போது தீர்க்கப்பட்டது, ₹120 மதிப்புள்ள சோடாவுக்கு ₹80 திரும்பப் கிடைத்தது” என்றார்.

ஒரு யூஸர், அடுத்த ஆர்டரில் உங்களுக்கு ஒரு பக்கெட் லைம் சோடாவை அனுப்புவார்கள், என்று கலாய்த்தார். வெப்பத்தின் காரணமாக லைம் சோடா ஆவியாகிவிட்டது, என்று இன்னொரு யூஸர் கமென்ட் செய்தார்.

கடந்த சில வாரங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சமீபத்தில், ஒரு குடும்பம் செப்டோவில் ஆர்டர் செய்ஹெர்ஷேஸ் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலியைக் கண்டது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சாக்லேட் சிரப்பை உட்கொண்ட பிறகு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

மறுபுறம், அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்த தம்பதியினர், பேக்கேஜில் ஒரு விஷப் பாம்பு இருப்பதை பகிர்ந்த வீடியோ நெட்டிசன்களை திடுக்கிட வைத்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Swiggy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment