ராட்சத மலைப் பாம்பு மற்று நாயுடன் ஒரு நபர் புத்தகம் படித்துக்கொண்டு மெத்தையில் படுத்துக்கொண்டு ஒய்வெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வியப்பை வெளிப்படுத்தி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Man relaxes with giant python in bed, viral video prompts reactions: ‘Breakfast in bed’
ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட மலைப்பாம்புகள் அவற்றின் பெரிய அளவு மற்றும் வேட்டையாடும் திறன்களுக்காக அறியப்படுகின்றன. விஷப் பாம்புகளைப் போல இல்லாமல், மலைப்பாம்புகள் தங்கள் இரையை சுற்றி வளைத்து, அந்த விலங்கை மூச்சுத்திணறி இறக்கும் வரை இறுக்கமாக அழுத்துவதன் மூலம் கொல்கின்றன. விஷமற்ற தன்மை இருந்தபோதிலும், மலைப்பாம்புகள் மீது பலர் பீதியில் இருக்கும்போது, ஒருவர் தனது படுக்கையில் ஒரு ராட்சத மலைப்பாம்புடன் ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தை திகைக்க வைத்துள்ளது.
இணையத்தில் ‘தி ரியல் டார்ஜான்’ என்று பிரபலமான மைக் ஹோல்ட்சன், மலைப்பாம்பு மற்றும் நாயுடன் படுக்கையில் அமர்ந்து புத்தகம் படிப்பதை இந்த வைரல் வீடியோ காட்டுகிறது. வீடியோவைப் பகிர்ந்த அவர், “சிறந்த தலைப்பை பதிவிடுங்கள். உங்கள் நண்பரை டேக் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பாருக்கள்:
இந்த வீடியோவைப் பார்த்த பல சமூக ஊடக பயனர்கள் ஹோல்ட்சன் பாம்பைக் கட்டுப்படுத்த முயன்றதாக விமர்சித்ததாலும், 14 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற வீடியோ விவாதத்தைத் தூண்டியது. "அட இது மிகவும் இனிமையானது .. என்னையும் எனது எக்ஸையும் நினைவூட்டுகிறது" என்று ஒரு பயனர் எழுதினார். “அவர் எவ்வளவு கூல் ஆக இருக்கிறார் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை.... அவர் எப்போதும் ஒரு பாம்பு நகர்வதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.
“நிச்சயமாக இல்லை!!!! பாம்பு போக வேண்டும்!!” என்று மூன்றாவது பயனர் கமெண்ட் செய்துள்ளார். “பையா அந்த பாம்பு உங்கள் இருவரையும் எப்படி வீழ்த்தப் போகிறேன் என்று அமர்ந்திருக்கிறது” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், சில மலைப்பாம்பு இனங்கள், ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு போன்றவை, 20 அடி நீளத்திற்கு மேல் வளரக்கூடியவை மற்றும் பூமியின் மிக நீளமான பாம்புகளில் ஒன்றாகும். அவை குறிப்பிடத்தக்க அளவு பெரியதாக இருந்தபோதிலும், மலைப்பாம்புகள் பெரும்பாலும் கவர்ச்சியான செல்லப் பிராணிகளாக வைக்கப்படுகின்றன. இருப்பினும், அவற்றின் அளவு மற்றும் உணவுத் தேவைகள் காரணமாக அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது.
கடந்த வாரம், தாய்லாந்தில் வெள்ளத்தில் மிதக்கும் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் வீடியோவில் நாயைத் தின்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஊர்வன வயிறு பெரியதாகி மற்றும் நீரில் மூழ்கி சாலையில் சென்றுகொண்டிருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.