சிங்கத்திடம் என்ன பேச்சு? பூங்காவில் பீதியை கிளப்பிய இளைஞர் – வைரல் வீடியோ

இந்த வீடியோவை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த நபரின் மனநிலையை பரிசோதித்து தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பலரும் தங்களின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள நேரு உயிரியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை அன்று ஒரு நபர் சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்று அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்தார். 31 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆப்பிரிக்க சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதியின் மேலே உள்ள பாறை பகுதியில் அமர்ந்து கொண்டு அங்கே சிங்கத்தை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். அங்கே இருக்கும் மக்கள் அவரை அங்கே இருந்து கிளம்புங்கள் என்று கத்திக் கொண்டிருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

அந்த நபரின் செய்கையால் மிகவும் ஆத்திரம் அடைந்த சிங்கம், அவரை தாக்கும் நோக்கில் பாறை மேலே எற முயற்சிகள் மேற்கொண்டதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புடன் அனைவரும் இருக்க, உயிரியல் பூங்கா ஊழியர்கள் வந்து அந்த நபரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இந்த வீடியோவை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த நபரின் மனநிலையை பரிசோதித்து தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பலரும் தங்களின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Man rescued from african lions enclosure in hyderabad zoo as the big cat aims for him

Next Story
உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்மணி… பேஸ்புக்கில் ராஜினாமா கடிதத்துடன் பதவி விலகிய டாக்டர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com