/indian-express-tamil/media/media_files/2025/11/05/python-cat-2-2025-11-05-11-02-42.jpg)
மார்கஸ் லீ என்பவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த இந்த வீடியோவில், பூனையைக் கொடிய மலைப்பாம்பின் பிடியிலிருந்து விடுவிக்கும் ஒரு சம்பவம் பரபரப்பாக பதிவாகியுள்ளது. Photograph: (Picture of incident taken by Marcus Lee)
சிங்கப்பூரில் ஒரு நபர், மலைப்பாம்பின் வாலைப் பிடித்துச் சுழற்றி, ஒரு பூனையைக் காப்பாற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மார்கஸ் லீ என்பவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த இந்த வீடியோவில், பூனையைக் கொடிய மலைப்பாம்பின் பிடியிலிருந்து விடுவிக்கும் ஒரு சம்பவம் பரபரப்பாக பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரில் ஒருவர் மலைப்பாம்பின் வாலைப் பிடித்துச் சுழற்றி, பூனையைக் காப்பாற்றிய செயல் இணையத்தில் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் மார்கஸ் லீ என்ற நபர், மலைப்பாம்பு தாக்குதலின் நடுவில் அதை வாலைப் பிடித்துச் சுழற்றி பூனையைக் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. அவரது செயல் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
சிங்கப்பூரில் ஒரு நபர், ஒரு பூனையை மலைப்பாம்பிடம் இருந்து காப்பாற்றும் சம்பவத்தைப் படமாக்கிக் கொண்டே, பாம்பைப் பிடித்து சுழற்றியுள்ளார். இந்த வீடியோ மார்கஸ் லீ என்பவரால் பதிவு செய்யப்பட்டு, அக்டோபர் 30-ம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஒரு நிமிட வீடியோவில், அவர் ஒரு கையால் தனது ஃபோனைப் பிடித்துக்கொண்டும், மற்றொரு கையால் பாம்பின் வாலைப் பிடித்துத் தூக்குதும் தெரிகிறது. அருகில் உள்ள செடிகள், மரங்கள் இடையே இருந்து ஒரு "கரகரப்பான மூச்சுத் திணறல் சத்தம்" கேட்டதால் உடனடியகா தான் செயல்பட்டதாக மார்கஸ் லீ கூறினார்.
வீடியோவைப் பாருங்கள்:
அவர் தலையிடுவதற்கு முன், மலைப்பாம்பு ஒரு வடிகாலில் பூனையைச் சுற்றிக் கொண்டு, அதை மூச்சுத்திணறச் செய்து கொண்டிருந்தது. பூனையை இறுக்கமாகச் சுற்றியிருந்த மலைப்பாம்பை லீ வடிகாலில் இருந்து வெளியே இழுப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது.
மேலும், பூனையை இருக்கிச் சுற்றியிருந்த மலைப் பாம்பை, அவர் அப்படியே பிடித்து மீண்டும் மீண்டும் சுழற்றுகிறார். பின்னர் தனது பாதத்தைப் பயன்படுத்தி பாம்பிடம் இருந்து பூனையை விடுவிக்கிறார். பல முயற்சிகளுக்குப் பிறகு, பூனை பிடியிலிருந்து விலகி, வேகமாக ஓடித் தப்பியது. மலைப்பாம்பு பின்னர் அருகில் உள்ள செடிகள் மரங்களை நோக்கி ஊர்ந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. மலைப்பாம்பிடம் இருந்த் தப்பித்த பிறகு பூனை பாதுகாப்பான இடத்தை நோக்கி விரைந்து ஓடியது” என்று மார்கஸ் லீ தெரிவித்துள்ளார்.
பின்னர், மார்கஸ் லீ, “மலைப்பாம்பிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்ற தலைப்புடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த வீடியோவுக்கு பார்வையாளர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகள் வந்துள்ளன. சிங்கப்பூர் வனவிலங்கு காட்சிகள் (Singapore Wildlife Sightings) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, பல்வேறு விதமான எதிர்வினைகளைப் பெற்றது. சிலர், மார்கஸ் லீ இயற்கையான வேட்டையாடும் நிகழ்வில் தலையிட்டதாக வாதிட்டனர். மற்றவர்கள் விலங்கைக் காப்பாற்ற அவர் எடுத்த விரைவான நடவடிக்கையைப் பாராட்டினர்.
சிலர் பூனையைச் சீக்கிரம் விடுவிக்க இரண்டு கைகளையும் பயன்படுத்தாமல், ஒரு கையால் படமெடுக்க முடிவு செய்ததை விமர்சித்தனர். கருத்துக்கள் பல்வேறு விதமாக இருந்தாலும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஆனால், இந்த சம்பவம் சிங்கப்பூரில் எங்கே நடந்தது என சரியான இடம் வெளியிடப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us