அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தின் கேசரியா பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது அது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் என்ன தனித்தன்மை இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம்.
சீக்கியர் ஒருவர் கேசரியாவை ஐந்து வெவ்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் பாடுகிறார். ஸ்னேதீப் சிங் கல்சி என அடையாளம் காணப்பட்ட பாடகர், தனது இதயத்தை உருக்கும் குரலால் மட்டுமல்லாமல், மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஒவ்வொரு மொழியின் உச்சரிப்பிலும் இணையவாசிகளை திக்கு முக்காட வைத்துள்ளார்.
இதில் ஒரு முக்கிய விஷயம் என்ன வென்றால் அந்த நபருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என எந்தத் தென்னிந்திய மொழிகளும் தெரியாது.
ஆனாலும் தனது குரலால் பலரின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார். இந்தப் பாடல் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்பட பலரையும் ஈர்த்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/